செய்திகள்
பிரதமர் மோடி, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்

பிரதமர் மோடியுடன் யோகி ஆதித்யநாத் சந்திப்பு: கருத்து வேறுபாடு செய்திக்கு முற்றுப்புள்ளி?

Published On 2021-06-11 07:22 GMT   |   Update On 2021-06-11 07:22 GMT
யோகி ஆதித்யநாத் பிறந்த நாளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து கூறாததால், கருத்து வேறுபாடு உள்ளதாக செய்திகள் வெளியாகின.
உத்தர பிரதேசத்தில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. யோகி ஆதித்யநாத் முதலமைச்சராக இருந்து வருகிறார். உத்தர பிரதேச மாநில சட்டசபை தேர்தலின்போது யோகி ஆதித்யநாத் எம்.பி.யாக இருந்தார். பின்னர் எம்.பி. பதவியை ராஜினாமா செய்துவிட்டு, முதல்வராக பதவி ஏற்றார்.

அடுத்த ஆண்டு உத்தர பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் மீண்டும் வெற்றி பெற பா.ஜனதா விரும்புகிறது. தற்போது நடைபெற்று வரும் யோகி ஆதித்யநாத் ஆட்சி குறித்து ஆய்வு செய்தது.

உள்ளாட்சி தேர்தலில் சறுக்கல், ஆற்றில் பிணங்கள் மிதந்து சென்றது, கொரோனா தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகள் பா.ஜனதாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என உணர்கிறது. இதனால் உத்தர பிரதேச மாநில மந்திரிசபையை மாற்றியமைக்க மேலிடம் முடிவு செய்துள்ளது.

இதற்கிடையில் கடந்த வாரம் யோகித் ஆதித்யநாத்தின் பிறந்த நாள் வந்தது. அப்போது பிரதமர் மோடி, தேசிய தலைவர் நட்டா ஆகியோர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கவில்லை. இதனால் யோகி ஆதித்யநாத்துக்கும் மேலிட தலைவர்களுக்கும் இடையில் கருத்து வேறுபாடு நிலவுவதாக செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில்தான் நேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவை யோகி ஆதித்யநாத் சந்தித்தார். தற்போது பிரதமர் மோடியை சந்தித்து பேசி வருகிறார்கள். இதனால் மேலிட தலைவர்களுடன் இருந்து கருத்து வேறுவாடு சரியாகிவிட்டதாக கூறப்படுகிறது.

2022-ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கான பா.ஜனதா முதலமைச்சர் வேட்பாளர் யோகி ஆதித்யநாத்துதான் என்று பா.ஜனதா தேசிய தலைமை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News