ஆன்மிகம்
ராகு கேது

நலங்களை வழங்கும் நாக கிரகங்களின் பெயர்ச்சி

Published On 2020-08-27 09:43 GMT   |   Update On 2020-08-27 09:43 GMT
நவக்கிரகங்களில் ராகு-கேது நீங்கலாக மற்ற கிரகங்கள் அனைத்தும் முன்னோக்கிச் செல்லும். ஆனால் ‘சாயா கிரகங்கள்’ என்று அழைக்கப்படும் ராகுவும், கேதுவும் மட்டும் பின்னோக்கிச் செல்கின்றன.
ராகுவைப் பற்றிய தகவல்கள்...

மனிதத் தலையும் பாம்பு உடம்பும்

* ராகுவிற்கு உகந்த கிழமை: சனிக்கிழமை

* உகந்த நட்சத்திரம்: திருவாதிரை, சுவாதி, சதயம்

* நட்புக்கிரகம்: புதன், சுக்ரன், சனி

* பிடித்தமான மலர்: மந்தாரை

* விரும்பும் சமித்து: அருகு

* உரிய ரத்தினம்: கோமேதகம்

* அதிதேவதை: பத்திரகாளி, துர்க்கை

* உச்ச வீடு: விருச்சிகம்

* நீச்ச வீடு: ரிஷபம்

* காரக அம்சம்: யோகம்

* விரும்பும் தானியம்: உளுந்து

* பிடித்த உலோகம்: கருங்கல்

* விரும்பும் வாகனம்: ஆடு

* மனைவியின் பெயர்: கிம்ஹிசை

* உரிய திசை: தென் மேற்கு

* பிடித்த சுவை: புளிப்பு

* காலம்: ராகு காலம்

இப்படிப்பட்ட அம்சங்களைக் கொண்ட ராகு, 18 மாதங்களுக்கு ஒரு முறை ஒரு ராசியில் தங்குவார். 12 ராசிகளையும் சுற்றிவர பதினெட்டு ஆண்டுகள் ஆகின்றன.

கேதுவைப் பற்றிய தகவல்கள்...

பாம்பு தலையும், மனித உடலையும் கொண்டவர் கேது பகவான்.

* உகந்த கிழமை : சனிக்கிழமை

* உகந்த நட்சத்திரம் : அசுவதி, மகம், மூலம்

* நட்புக்கிரகம் : புதன், சுக்ரன், சனி

* பிடித்த மலர் : செவ்வரளி

* விரும்பும் சமித்து : தர்ப்பை

* விரும்பும் தானியம் : கொள்ளு

* உரிய ரத்னம் : வைடூர்யம்

* அதிதேவதை : விநாயகர், சரஸ்வதி, பிரம்மா, சித்ரகுப்தர்

* உச்ச வீடு : விருச்சிகம்

* நீச்ச வீடு : ரிஷபம்

* காரக அம்சம் : ஞானகாரகன்

* பிடித்த உலோகம் : துருக்கல்

* விரும்பும் வாகனம் : சிம்மம்

* மனைவியின் பெயர் : சித்திரலேகா

* பிடித்த சுவை : புளிப்பு

* காலம் : எமகண்டம்

இப்படிப்பட்ட அம்சங்களைக் கொண்ட கேது, ராகுவுக்கு 7-ம் இடத்தில் ஒன்றரை வருட காலம் ஒரு ராசியில் தங்குவார். பனிரெண்டு ராசிகளையும் சுற்றிவர 18 ஆண்டுகள் ஆகும். 
Tags:    

Similar News