தொழில்நுட்பம்
சாம்சங்

இணையத்தில் லீக் ஆன கேலக்ஸி பட்ஸ் பிளஸ் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் ரென்டர்கள்

Published On 2019-12-21 06:42 GMT   |   Update On 2019-12-21 06:42 GMT
சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி பட்ஸ் பிளஸ் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் ரென்டர்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.



சாம்சங் நிறுவனம் புதிதாக ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் சாதனத்தை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. புதிய இயர்பட்ஸ் கேலக்ஸி பட்ஸ் பிளஸ் என்ற பெயரில் அறிமுகமாகும் என தெரிகிறது. 

மேலும் இதனை சாம்சங் கேலக்ஸி எஸ்11 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுடன் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்துடன் புதிய கேலக்ஸி பட்ஸ் பிளஸ் இயர்பட்ஸ் ரென்டர்களும் இணையத்தில் வெளியாகியுள்ளது. தற்சமயம் வெளியாகி இருக்கும் புகைப்படங்களின் படி கேலக்ஸி பட்ஸ் பிளஸ் பார்க்க கேலக்ஸி பட்ஸ் போன்றே காட்சியளிக்கிறது.



பட்ஸ் பிளஸ் இயர்போன் ப்ளூடூத் 5.0, அக்செல்லோமீட்டர், பிராக்சிமிட்டி மற்றும் ஹால் சென்சார்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய இயர்பட்ஸ் விவரங்கள் அடங்கிய ஏ.பி.கே. குறியீடுகளில் விரைவில் வெளியாக இருக்கும் சாம்சங் ஸ்மார்ட் ஹோம் சாதனங்கள் பற்றிய விவரங்களும் இடம்பெற்று இருக்கிறது.

அதன்படி 2020 ஆண்டில் புதிதாக ஏர் பியூரிஃபையர், குளிர்சாதன பெட்டி மற்றும் ஓவன் போன்றவற்றை சாம்சங் அறிமுகம் செய்ய இருப்பதாக தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கேலக்ஸி பட்ஸ் பிளஸ் இயர்பட்ஸ் அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் பட்டியலிடப்பட்டதாக கூறப்பட்டது.

இந்த இயர்பட்ஸ் SM-R175 எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. இவைதவிர புதிய இயர்பட்ஸ் பற்றி எவ்வித தகவலும் வெளியாகவில்லை. புதிய சாம்சங் இயர்போன்கள் ஆப்பிள் நிறுவனத்தின் ஏர்பாட்ஸ் ப்ரோ மாடலுக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News