செய்திகள்
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா

வீட்டுக்கடன் வட்டி குறைப்பு- எஸ்.பி.ஐ. வங்கி அறிவிப்பு

Published On 2021-09-17 08:05 GMT   |   Update On 2021-09-17 08:05 GMT
சம்பளதாரர்கள் மற்றும் சம்பளம் அல்லாதவர்களுக்கு என வட்டி விகிதம் மாறுபடும். சம்பளம் வாங்குபவர்களைவிட சம்பளம் அல்லாதவர்களுக்கு வட்டி விகிதம் அதிகமாகவே இருக்கும்.
மும்பை:

வீட்டுக்கடன் உள்பட மக்களுக்கு பயனளிக்கும் பல்வேறு கடன்களை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வழங்கி வருகிறது. அவ்வப்போது வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளும் அறிவித்து வருகிறது.

அந்த வகையில் எஸ்.பி.ஐ. வீட்டுக்கடனில் வட்டியை குறைத்து அறிவித்திருக்கிறது. எஸ்.பி.ஐ. விழாக்கால சலுகையாக இனி வீட்டுக்கடன் வாங்குபவர் 6.7 சதவீதத்துக்கும் குறைவான வட்டி விகிதத்தில் எந்தத் தொகைக்கும் வீட்டுக்கடன் பெறலாம்.



இதற்கு முன்பு வீட்டுக்கடன் ரூ.75 லட்சத்திற்கு மேல் வாங்கியவர்களுக்கு வட்டி 7.15 சதவீதம் ஆக இருந்தது. இந்த அதிரடி வட்டி குறைப்பின் மூலம் மாதந்தோறும் செலுத்தும் இ.எம்.ஐ. தொகையும் குறையும்.

முன்னதாக சம்பளதாரர்கள் மற்றும் சம்பளம் அல்லாதவர்களுக்கு என வட்டி விகிதம் மாறுபடும். சம்பளம் வாங்குபவர்களைவிட சம்பளம் அல்லாதவர்களுக்கு வட்டி விகிதம் அதிகமாகவே இருக்கும். ஆனால் இந்த சலுகையின் மூலம் சம்பளம் அல்லாதவர்கள் கூடுதல் வட்டி செலுத்த தேவையில்லை.

எஸ்.பி.ஐ. வழங்கி இருக்கும் இந்த சலுகை அதிகளவில் கடன் வாங்குவோருக்கு 45 அடிப்படை புள்ளிகள் வட்டி குறைவாக கிடைக்கும்.

வட்டி குறைப்பு மட்டுமல்லாமல் செயல்பாட்டு கட்டணத்தையும் 100 சதவீதம் வரை தள்ளுபடி செய்துள்ளது. இருப்பினும் இந்த வட்டி சலுகைகள் அவரவர் சிபில் ஸ்கோரினை பொறுத்தது என்றும் எஸ்.பி.ஐ. தெரிவித்துள்ளது.


Tags:    

Similar News