செய்திகள்
ஜாப்ரா ஆர்சர்

இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் ஒப்பந்தத்தில் ஜாப்ரா ஆர்சர், ரோரி பேர்ன்ஸ்க்கு இடம்

Published On 2019-09-20 11:05 GMT   |   Update On 2019-09-20 11:05 GMT
இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் ஒப்பந்தத்தில் வேகப்பந்து வீச்சாளரான ஜாப்ரா ஆர்சர் இடம் பிடித்துள்ளனர்.
இங்கிலாந்து அணியின் சிறந்த வேகப்பந்து வீச்சாளராக உருவெடுத்துள்ளார் ஜாப்ரா ஆர்சர். 24 வயதேயாகும் இவர் உலகக்கோப்பை தொடரிலும், ஆஷஸ் தொடரிலும் சிறப்பாக பந்து வீசினார்.

இதனால் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் மத்திய ஒப்பந்தத்தில் இடம் பிடித்துள்ளார். அதேபோல் சிறப்பாக பேட்டிங் செய்த ரோரி பேர்ன்ஸ் டெஸ்ட் போட்டிக்கான ஒப்பந்தத்தில் இடம்பிடித்துள்ளார்.

ஆனால், சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரான மொயீன் அலி, மற்றொரு சுழற்பந்து வீச்சாளரான அடில் ரஷித் ஆகியோர் டெஸ்ட் போட்டி ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
Tags:    

Similar News