தொழில்நுட்பம்
சியோமி

விற்பனையில் மீண்டும் அசத்திய சியோமி -4 மாதங்களில் இத்தனை கோடியா?

Published On 2019-08-21 08:13 GMT   |   Update On 2019-08-21 08:13 GMT
சியோமி நிறுவனம் இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில் விற்பனை செய்திருக்கும் மொத்த ஸ்மார்ட்போன் விவரங்களை வெளியிட்டுள்ளது.
சீன ஸ்மார்ட்போன் நிறுவமான சியோமி சந்தை ஆய்வு நிறுவனங்களுக்கு எதிராக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. 2019 ஆம் ஆண்டில் விற்பனை செய்யப்பட்ட மொத்த ஸ்மார்ட்போன் யூனிட்கள் பற்றி ஆய்வு நிறுவனங்கள் தவறான விவரம் வழங்கியதாக சியோமி தெரிவித்திருக்கிறது.

சியோமி நிறுவன தலைவர் லெய் ஜூன், 2019 ஆண்டிற்கான முதல் காலாண்டு காலத்தில் விற்பனையான மொத்த ஸ்மார்ட்போன் பற்றி சில சந்தை ஆய்வு மையங்கள் வெளியிட்ட தகவல்களை பல்வேறு ஊடக நிறுவனங்கள் வெளியிட்டன.

இதில் 2019 முதல் காலாண்டில், சியோமி ஸ்மார்ட்போன் விற்பனை 2.75 கோடிகளை கடந்திருக்கிறது என லெய் ஜூன் அறிக்கையில் தெரிவித்திருந்தார். முன்னதாக வெளியான தகவல்களில் 2019 முதல் காலாண்டில் சியோமி நிறுவனம் மொத்தம் 2.5 கோடி ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்திருந்ததாக சர்வதேச டேட்டா கார்ப்பரேஷன் (ஐ.டி.சி.) தெரிவித்தது.

இந்நிலையில் தற்போது இரண்டாம் காலாண்டில் விற்பனை ஆன சியோமி ஸ்மார்ட்போன்களின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான முதல் காலாண்டில் ரூ.730 கோடி வருவாயை ஈட்டியதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சியோமி ஸ்மார்ட்போன்கள் விற்பனை 14.8% அதிகரித்துள்ளது. சர்வதேச அளவில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு, 33.1%  வருவாய் அதிகரித்துள்ளது. மேலும் இந்த இரண்டாம் காலாண்டில் 3.21 கோடி ஸ்மார்ட்போன்களை சியோமி விற்பனை செய்து அசத்தியுள்ளது.
Tags:    

Similar News