வழிபாடு
திருமுருகன் திருச்சபையில் சப்பர பவனி

திருமுருகன் திருச்சபையில் சப்பர பவனி

Published On 2022-01-08 04:58 GMT   |   Update On 2022-01-08 04:58 GMT
வருகிற 11-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மதியம் அலகு குத்தி பக்தர்கள் பாத யாத்திரையாக திருச்செந்தூருக்கு புறப்பட்டு செல்கின்றனர்.
முக்கூடல் அருகே வடக்கு அரியநாயகிபுரம் திருமுருகன் திருச்சபையின் 37-வது ஆண்டு பாத யாத்திரை குழுவினர் சிவன் கோவில் முருகன் சன்னதியில் மாலை அணிந்து விரதம் இருந்து வருகின்றனர்.

தொடர்ந்து நேற்று சிறப்பு பூஜை நடந்தது. காலையில் கும்பாபிஷேகம், மதியம் அன்னதானம் நடந்தது. மாலையில் முருக பெருமான் சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இரவில் புஷ்பாஞ்சலி, பஜனை நடைபெற்றது. வருகிற 11-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மதியம் அலகு குத்தி பக்தர்கள் பாத யாத்திரையாக திருச்செந்தூருக்கு புறப்பட்டு செல்கின்றனர். ஏற்பாடுகளை குருசாமி பெருமாள் கம்பர் தலைமையில், பக்தர்கள் செய்து இருந்தனர்.
Tags:    

Similar News