செய்திகள்
ரஷித் கானை பாராட்டும் சக வீரர்கள்

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்ட்- ஜிம்பாப்வே முதல் இன்னிங்சில் 287 ரன்னில் ஆல் அவுட்

Published On 2021-03-12 21:12 GMT   |   Update On 2021-03-12 21:12 GMT
ஜிம்பாப்வேவுக்கு எதிரான 2வது டெஸ்டில் ஆப்கானிஸ்தான் முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 545 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்துள்ளது.
அபுதாபி:

ஜிம்பாப்வே மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் அபுதாபியில் நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர் இப்ராகிம் சட்ரன் அரை சதம் அடித்து 72 ரன்னில் வெளியேறினார். ஹஷ்மத்துல்லா ஷஹிதியும், அஸ்கர் ஆப்கனும் பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்தினர்.

அஸ்கர் ஆப்கன் 164 ரன்னில் வெளியேறினார். தொடர்ந்து அபாரமாக ஆடிய ஷஹிதி இரட்டை சதமடித்து அசத்தினார். இதையடுத்து, ஆப்கானிஸ்தான் அணி 160 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 545 ரன்கள் எடுத்து டிக்ளேர் செதனர்.  

இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் ஜிம்பாப்வே அணி விக்கெட் இழப்பின்றி 50 ரன்கள் எடுத்துள்ளது.

இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் நேற்று நடந்தது. தொடக்க ஆட்டக்காரர் பிரின்ஸ் மாஸ்வேர் அரை சதமடித்து 65 ரன்னில் ஆட்டமிழந்தார். கெவின் கவுசா, முசகண்டா ஆகியோர் தலா 41 ரன்னில் ஆட்டமிழந்தனர்.

சிக்கந்தர் ரசா பொறுப்புடன் ஆடி 85 ரன்னில் அவுட்டானார். கடைசி கட்டத்தில் சபக்வா 33 ரன்கள் எடுத்தார்.

இறுதியில், ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சில் 287 ரன்னில் ஆல் அவுட்டானது. இதனால் பாலோ ஆன் பெற்ற அந்த அணி இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்தது.

மூன்றாம் நாள் முடிவில் ஜிம்பாப்வே அணி  விக்கெட் இழப்பின்றி 24 ரன்கள் எடுத்துள்ளது.

ஆப்கானிஸ்தான் சார்பில் ரஷித் கான் 4 விக்கெட்டும், அமீர் ஹம்சா 3 விக்கெட்டும் எடுத்துள்ளனர்.
Tags:    

Similar News