செய்திகள்
கொரோனா தடுப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்ட போது எடுத்தப்படம்.

பொதுமக்கள் அலட்சியமாக செயல்பட வேண்டாம்-மாநகராட்சி கமிஷனர் கிராந்தி குமார் அறிவுறுத்தல்

Published On 2021-08-01 09:10 GMT   |   Update On 2021-08-01 09:15 GMT
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் 2-வது அலையை கட்டுப்படுத்துவதோடு 3-வது அலை பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திருப்பூர்:

திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டில் கொரோனா உதவி மையம் இன்று திறக்கப்பட்டது. கலெக்டர் வினீத் மற்றும் மாநகராட்சி கமிஷனர் கிராந்தி குமார் கலந்துகொண்டு உதவி மையத்தை திறந்து வைத்தனர்.

பின்னர் மார்க்கெட் வியாபாரிகள் மற்றும் சந்தைக்கு வருபவர்களிடம் நோட்டீஸ் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து சுகாதாரத் துறை அதிகாரிகள், போலீசார் மற்றும் பொதுமக்களுடன் கொரோனா தடுப்பு உறுதிமொழி எடுத்து கொண்டனர்.  

இதையடுத்து மாநகராட்சி கமிஷனர் கிராந்தி குமார் நிருபர்களிடம் கூறியதாவது :-

திருப்பூர் மாநகராட்சி பகுதியில் 2-வது அலையை கட்டுப்படுத்துவதோடு 3-வது அலை பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

பொதுமக்கள் அதிக அளவில் தென்னம்பாளையம் மார்க்கெட்டில் கூடுவதால் உதவி மையம் அமைத்து முககவசம் அணியாமல் வருபவர்களுக்கு முக கவசம் அளிப்பதோடு தொற்று குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா 2-வது அலை முடிந்து விட்டதாக எண்ணி பொதுமக்கள் அலட்சியம் கொள்ளாமல் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும். 

அதேபோல் வியாபாரிகளும் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு முன்பதிவு அடிப்படையில் கடை இயங்கும் நேரத்தை தெரிவித்து பொருட்கள் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண் டும் என்றார்.
Tags:    

Similar News