தொழில்நுட்பச் செய்திகள்
ஆப்பிள் டிவி

ஆண்ட்ராய்டு டிவி பயனர்களுக்கு இனி இந்த சேவை கிடையாது

Published On 2022-03-22 06:42 GMT   |   Update On 2022-03-22 06:42 GMT
ஆப்பிள், கூகுள் நிறுவனங்களிடையே கடும் போட்டி நிலவுவதால் ஆப்பிள் சாதனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனம் தனது வெப் ஸ்ட்ரீமிங் சேவையான ஆப்பிள் டிவியை உலகம் முழுவதும் அளித்து வருகிறது. பயனர்கள் ஆப்பிள் டிவியில் தங்களுக்கு விருப்பமான திரைப்படங்கள், வெப் சீரிஸ்களை கண்டு களிக்கலாம். ஆப்பிள் சாதனங்கள், ஆண்ட்ராய்டு சாதனங்கள், அமேசான் சாதனங்கள் உள்ளிட்டவற்றில் இந்த ஆப்பிள் டிவி சேவையை பயனர்கள் பயன்படுத்தி வந்தனர்.

இந்நிலையில் ஆப்பிள் நிறுவனம் தனது ஆப்பிள் டிவி சேவையை ஆண்ட்ராய்டு டிவி பயனர்களுக்கு நிறுத்தப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆண்ட்ராய்டு டிவி ஓஎஸ் மற்றும் கூகுள் டிவி க்ரோம்கேஸ்ட் ஸ்ட்ரீமிங் சாதனங்கள் ஆகியவற்றில் ஆப்பிள் டிவி சேவை வழங்கப்படாது என்றும், சேவையை பயன்படுத்த விரும்புவோர் ஐபோன், ஐபேட் மற்றும் பிற ஆப்பிள் சாதனங்களை கொண்டு பயன்படுத்தலாம் எனவும் செய்தி வெளியிடப்படும் என கூறப்பட்டுள்ளது.

ஆப்பிள், கூகுள் நிறுவனங்களிடையே கடும் போட்டி நிலவுவதால் ஆப்பிள் சாதனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News