செய்திகள்
கோப்புபடம்

தமிழகத்தில் வேளாண் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் - அர்ஜூன் சம்பத் பேட்டி

Published On 2021-11-22 09:45 GMT   |   Update On 2021-11-22 09:45 GMT
சென்னையில் கனமழை காரணமாக பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது.
திருப்பூர்:
 
இந்து மக்கள் கட்சி (தமிழகம்) சார்பில் ஆன்மிக அரசியல் விளக்க பொதுக்கூட்டம் திருப்பூர் பி.என்.ரோடு பாண்டியன்நகரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில துணைத்தலைவர் பாலாஜி தலைமை தாங்கினார். மாநில அமைப்புச் செயலாளர் பூபாலு, மாநில தகவல் தொடர்பாளர் ஹரிஹரன், மாவட்ட செயலாளர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

மாநில செயலாளர் பகவான் நந்து வரவேற்றார். மாநில துணை நிறுவன தலைவர் முத்தரங்க சாமி, முதன்மை செயலாளர் செந்தில்குமார், தேர்தல் பிரிவு செயலாளர் காலனி சுப்பிரமணி யம் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.

கூட்டத்தில் இந்து மக்கள் கட்சி நிறுவனத்தலைவர் அர்ஜூன் சம்பத் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். முன்னதாக அர்ஜூன் சம்பத் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். 

அப்போது அவர் கூறிய தாவது:

சென்னையில் கனமழை காரணமாக பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. கடந்த 70 ஆண்டுகளாக இதே நிலை நீடிக்கிறது. சுமார் ரூ.15 ஆயிரம் கோடி மதிப்பில் சென்னையை சீரமைக்கும் திட்டங்கள் எல்லாம் கொண்டு வரப்பட்டது. ஆட்சி பொறுப்பில் அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகள் இருந்தாலும் இதுவரை நிரந்தர தீர்வு காணப்படவில்லை . 

எனவே சென்னையில் மீட்பு நிவாரண பணிகளை மேற்கொள்வதுடன், நிரந்தர தீர்வு காண வேண்டும். மேலும் சென்னை மாநகராட்சி, நகராட்சி ஊழல்களில் ஈடுபட்டவர்கள் மீது கடு மையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தேசிய புலனாய்வு மையம் இந்த சம்பவத்தை விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இன்று திருச்சியில் ஆடு திருடர்களால் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. எனவே தமிழக முதல்-அமைச்சர் இந்த விஷயங்களில் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.  

கம்யூனிஸ்டு கட்சிகள் மற்றும் வெளிநாட்டு சக்திகளின் நெருக்கடி காரணமாகவே வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. இது சட்டம் ஒழுங்கு பிரச்சினை யாக தொடர்வதால் ஜனநாயக அடிப்படையில் பிரதமர் விட்டுக் கொடுத்துள்ளார். 

நாடு முழுதுவம் இந்த சட்டம் வாபஸ் பெறப்பட்டாலும் தமிழகத்தில் வேளாண் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News