செய்திகள்
கோப்புபடம்

‘நமக்கு நாமே’ திட்டத்தின் கீழ் அவிநாசி அரசு பள்ளியில் மேம்பாட்டுப்பணி

Published On 2021-10-18 06:06 GMT   |   Update On 2021-10-18 06:06 GMT
இரண்டாவது தளத்தின் தடுப்பு சுவற்றில் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு கருதி ‘இரும்பு கிரில்’ அமைப்பது போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
அவிநாசி:

அவிநாசி போலீஸ் நிலையம் அருகேயுள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ஆண்டு தோறும் மாணவர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது 350 பேர் உள்ளனர். கூடுதலாக 4 வகுப்பறை கட்டிடங்கள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே உள்ள வகுப்பறைகளின் தரையில் ‘டைல்ஸ்’ பதிப்பது, பள்ளியின் முகப்பில் ‘பேவர் பிளாக்‘ கற்கள் பதிப்பது, புதிதாக கட்டப்பட்ட வகுப்பறை கட்டிடத்தின் இரண்டாவது தளத்தின் தடுப்பு சுவற்றில் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு கருதி ‘இரும்பு கிரில்’ அமைப்பது போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

அவிநாசி பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் அரசின் ‘நமக்கு நாமே’ திட்டத்தின் கீழ் இப்பணிகளை மேற்கொள்ள ரூ.6 லட்சம்  மதிப்பில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. இதில், 2 லட்சம் ரூபாய் சார்பில் பள்ளி நிர்வாகம் பங்களிப்பாக செலுத்த வேண்டும் என்ற நிலையில் நன்கொடையாளர்களின் உதவி எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நேரம் இப்பள்ளியில் இட நெருக்கடி அதிகரிக்கும் சூழல் இருப்பதால் அருகேயுள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள காலி வகுப்பறை கட்டிடங்களை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை ஒருபுறம் எழுந்துள்ளது.
Tags:    

Similar News