செய்திகள்
கொரோனா தடுப்பூசி குறித்த கணக்கெடுக்கும் பணி

விக்கிரவாண்டி பகுதியில் கொரோனா தடுப்பூசி குறித்த கணக்கெடுக்கும் பணி

Published On 2021-06-25 09:06 GMT   |   Update On 2021-06-25 09:06 GMT
கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் வருகின்ற முகாம்களில் கட்டாயம் தடுப்பூசி செலுத்திகொண்டு கடைகளில் பணி புரியவேண்டும் என அறிவுறுத்தினர்.
விக்கிரவாண்டி:

விழுப்புரம் மாவட்டத்தில் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டு, பணிபுரிகிறார்களா? என்பதை அந்தந்த பகுதிக்குட்பட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, அதனை உறுதி செய்யவேண்டு்ம் என மாவட்ட கலெக்டர் மோகன் உத்தரவிட்டுள்ளார்.

அதன்அடிப்படையில் விக்கிரவாண்டி பேரூராட்சிக்குட்பட்ட கடைவீதிகளில் உள்ள கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தி கொண்டது குறித்த கணக்கெடுக்கும் பணி நடந்தது. விக்கிரவாண்டி வட்டார மருத்துவமனை மருத்துவ அலுவலர் வினோத் தலைமையிலான குழுவினர் தடுப்பூசி குறித்து கணக்கெடுப்பு நடத்தியதோடு, தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் வருகின்ற முகாம்களில் கட்டாயம் தடுப்பூசி செலுத்திகொண்டு கடைகளில் பணி புரியவேண்டும் என அறிவுறுத்தினர்.

அப்போது பேரூராட்சி செயல் அலுவலர் அண்ணாதுரை, சுகாதார மேற்பார்வையாளர் கிருஷ்ணன், ஆய்வாளர் பாபு, பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் விஸ்வநாதன், மேற்பார்வையாளர் ராமலிங்கம், நோய் தடுப்பு பணியாளர்கள் வாசு, வெங்கடாசலம், வீரசேகர், அன்பரசன் மற்றும் .வர்த்தக சங்க நிர்வாகிகள் உடனிருந்தனர்.
Tags:    

Similar News