செய்திகள்
காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய காட்சி.

திருப்பூர் பகுதியில் குடியரசு தினவிழா கொண்டாட்டம்

Published On 2021-01-26 20:47 GMT   |   Update On 2021-01-26 20:47 GMT
திருப்பூர் சுற்றுவட்டார பகுதியில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.
திருப்பூர்:

ஊத்துக்குளி பகுதியில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. ஊத்துக்குளி கொங்கு மெட்ரிக் பள்ளியில் தலைவர் ஏ.கே.சி. தியாகராஜன் தேசிய கொடியை ஏற்றி வைத்து பேசினார்.இதில் பள்ளி செயலாளர் செந்தில்நாதன், பொருளாளர் சந்திரசேகர், முதல்வர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

செங்கப்பள்ளி ஸ்ரீகுமரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில் பள்ளி தாளாளர் மணி தேசியகொடியை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் ராமகிருஷ்ணன், ஸ்ரீகுமரன் பப்ளிக் பள்ளி முதல்வர் ஜெயமுரளி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



ஊத்துக்குளி சென்னிமலை சாலையில் உள்ள எஸ்.ஆர்.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில் பள்ளி தாளாளர் கருப்பணன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.பள்ளி முதல்வர் ஹரிதேவன் கலந்து கொண்டார்.

ஊத்துக்குளி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடந்த விழாவில் ஒன்றியக்குழு தலைவர் பிரேமா ஈஸ்வரமூர்த்தி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதில் ஊத்துக்குளி ஒன்றிய ஆணையாளர் ஜோதி நாத், வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமார், அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர். ஊத்துக்குளி போலீஸ் நிலையத்தில் நடந்த விழாவில் இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதில் சப்-இன்ஸ்பெக்டர் துரைசாமி, முருகேசன், கோமதி மற்றும் காவலர்கள் கலந்துகொண்டனர்.

திருப்பூர் கோவில்வழி பெருந்தொழுவு ரோட்டில் உள்ள பிரண்ட்லைன் குரூப் ஆப் ஸ்கூலில் நடந்த விழாவில் பிரண்ட்லைன் மிலேனியம் பள்ளி மற்றும் ரோட்டரி மெட்ரிக் பள்ளி தாளாளருமான டாக்டர் சிவசாமி தேசிய கொடியேற்றி வைத்தார்.

மெட்ரிக் மேல்நிலைபள்ளியில் தலைமை ஆசிரியர் அமராவதி, நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் துணைச்செயலாளர் வைஷ்ணவி நந்தன் தேசிய கொடியேற்றிவைத்து இனிப்புகள் வழங்கினார்.

அவினாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த குடியரசு தினவிழாவில் ஒன்றிய குழு துணைத்தலைவர் பிரசாந்குமார், ஒன்றிய ஆணையாளர் மனோகரன், வட்டார வளர்ச்சி அலுவலர் அரிகரன், ஒன்றிய கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர். அவினாசி பேரூராட்சி அலுவலக வளாகத்தில் செயல் அலுவலர் குணசேகரன் காந்திசிலைக்கு மாலை அணிவித்து தேசிய கொடியேற்றினார். நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர் கருப்பசாமி, அலுவலர்கள் கலந்துகொன்டனர்.

அவினாசி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் சங்க தலைவர் மு.சுப்பிரமணியம் தேசிய கொடியேற்றி வைத்தார். இதில் துணைத்தலைவர் ஜெயபால், சங்க மேலாண்மை இயக்குனர் சரவணகுமார், மேலாளர் சண்முகம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பழங்கரை தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் தலைவர் எ.வி.தனபால் தேசிய கொடியேற்றி வைத்தார். இதில் செயலாளர் வடிவேல் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்துகொண்டனர் கருணைபாளையம் கூட்டுறவு சங்கத்தில் ஒன்றிய கவுன்சிலர் மணி தேசிய கொடியேற்றி வைத்தார்.

பல்லடம் நகராட்சி அலுவலகத்தில் நடந்த விழாவில் ஆணையாளர் கணேசன் கொடியேற்றினார், பின்னர் சிறப்பாக பணியாற்றிய பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார். விழாவில் நகராட்சி பொறியாளர் சங்கர், வருவாய் ஆய்வாளர் பிரகாஷ், துப்புரவு ஆய்வாளர் சிவக்குமார், மேலாளர் ஜெரோம் மற்றும் பலர்கலந்துகொண்டனர்.

பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு தலைவர் தேன்மொழி கொடியேற்றினார். விழாவில் ஆணையாளர் கந்தசாமி மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் அலுவலர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

பல்லடம் போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்தில் துணை சூப்பிரண்டு ஸ்ரீராமச்சந்திரன் கொடியேற்றினார். பல்லடம் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் தங்கபாண்டியனும், போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் அன்புராஜும் தேசிய கொடியேற்றினர். பல்லடம் அருள்புரம் ஜெயந்தி பள்ளியில் தாளாளர் கிருஷ்ணன் தேசிய கொடியேற்றி வைத்து இனிப்பு வழங்கினார்.

குன்னத்தூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் சார்பதிவாளர் ஈஸ்வரி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் அலுவலக உதவியாளர் மேகலா மற்றும் பத்திர எழுத்தர்கள், அலுவலகப் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

குன்னத்தூர் போலீஸ் நிலையத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டது போலீஸ் இன்ஸ்பெக்டர் மசுதா பேகம் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் சப்-இன்ஸ்பெக்டர்கள் காவலர்கள் மற்றும் மகளிர் போலீசார் கலந்து கொண்டார்கள்.

குன்னத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்துகொண்ட செயல் அலுவலர் பாலசுப்பிரமணி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார் நிகழ்ச்சியில் சுகாதார மேற்பார்வையாளர் சிவகுமார் மற்றும் அலுவலக பணியாளர்கள் சுகாதார ஊழியர்கள் கலந்து கொண்டார்கள்.

திருப்பூர் கே.வி.ஆர்.நகரில் உள்ள கதிரவன் மெட்ரிக் பள்ளியில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. பள்ளி முதலவர் ஏ.பி.பாஸ்கரன் வரவேற்று பேசினார். பள்ளி தாளாளர் நாராயணமூர்த்தி தலைமை தாங்கி தேசியகொடியேற்றினார்.இந்திரா நாராயணமூர்த்தி சிறப்புரையாற்றினார்.மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.முடிவில் இணைய வழியில் ஆசிரியர் நன்றி கூறினார்.

திருப்பூர் தெற்கு மோட்டார் வாகன பழுது பார்ப்போர் நலச்சங்கத்தின் சார்பில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. சங்கத்தின் தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். செயலாளர் மு.மணிகண்டன் முன்னிலை வகித்தார். பயணியர் ஆட்டோஸ் சாஜன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். முடிவில் மாதாந்திர ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
Tags:    

Similar News