செய்திகள்
கொரோனா பரிசோதனை

பெங்களூருவில் கொரோனா பாதித்த போலீசாரின் எண்ணிக்கை 1,754 ஆக உயர்வு

Published On 2021-06-11 03:56 GMT   |   Update On 2021-06-11 03:56 GMT
பெங்களூருவில் இதுவரை கொரோனா பாதித்த 1554 போலீசார், வைரஸ் தொற்றில் இருந்து மீண்டு வந்துள்ளனர்.கொரோனா 2-வது அலையில் இதுவரை 16 போலீசார் தங்களது உயிரை பறி கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூரு

பெங்களூருவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பின்பு கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. ஆனாலும் பொதுமக்களை போன்று போலீசாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. பெங்களூருவில் நேற்று முன்தினத்தில் இருந்து நேற்று காலை வரை 7 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதன்மூலம் பெங்களூருவில் இதுவரை கொரோனா பாதித்த போலீசாரின் எண்ணிக்கை 1,754 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி இருந்த 7 போலீசார் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை கொரோனா பாதித்த 1554 போலீசார், வைரஸ் தொற்றில் இருந்து மீண்டு வந்துள்ளனர்.

கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி இருந்த 184 போலீசார், ஆஸ்பத்திரிகள் மற்றும் வீட்டு தனிமையில் இன்னும் சிகிச்சை பெற்று வருகிறாா்கள். பெங்களூருவில் கொரோனா 2-வது அலையில் இதுவரை 16 போலீசார் தங்களது உயிரை பறி கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News