செய்திகள்
தமிழிசை சவுந்தரராஜன்

தமிழக பா.ஜனதா தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் தமிழிசை

Published On 2019-09-02 07:38 GMT   |   Update On 2019-09-02 07:38 GMT
தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா மாநில கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக பா.ஜனதா தலைவர் பதவியை அவர ராஜினாமா செய்தார்.
சென்னை:

தமிழக பா.ஜனதா தலைவராக இருந்த டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா மாநில கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் தமிழிசைக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. தலைவர் ஸ்டாலின், கனிமொழி எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன் உள்பட ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

கவர்னர் நியமனம் பற்றி அறிவிப்பு வெளியானதும் தமிழிசை கட்சி தலைமை அலுவலகமான கமலாலயத்துக்கு சென்றார். அங்கு அவருக்கு கட்சி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

கவர்னர் அறிவிப்பு வந்த நிமிடத்தில் இருந்து நான் கட்சி உறுப்பினர் கிடையாது என்று கூறிய தமிழிசை உடனடியாக கட்சி தலைவர் பதவியையும், உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை மாநில உறுப்பினர் சேர்க்கை குழு தலைவர் சுப்பிரமணியத்திடம் வழங்கினார்.
Tags:    

Similar News