தொழில்நுட்பம்
ஒன்பிளஸ்

சத்தமின்றி டேப்லெட் உருவாக்கும் ஒன்பிளஸ்

Published On 2021-07-05 11:26 GMT   |   Update On 2021-07-05 11:26 GMT
ஒன்பிளஸ் நிறுவனம் உருவாக்கி வரும் புது டேப்லெட் மாடல் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.

ஒன்பிளஸ் நிறுவனம் டேப்லெட் பிரிவில் களமிறங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஐரோப்பிய யூனியன் காப்புரிமை அலுவலகத்தில் ஒன்பிளஸ் பேட் (OnePlus Pad) பெயரில் புது சாதனம் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. புது ஒன்பிளஸ் பேட் பற்றிய விவரங்கள் எதுவும் இடம்பெறவில்லை.



தற்போது புது ஒன்பிளஸ் பேட் 'examination' பிரிவில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. ஸ்மார்ட் டிவி, அணியக்கூடிய சாதனங்களை தொடர்ந்து ஒன்பிளஸ் தற்போது டேப்லெட் பிரிவில் களமிறங்க இருக்கிறது. வரும் நாட்களில் புது ஒன்பிளஸ் பேட் பற்றிய விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக ஒன்பிளஸ் நிறுவனம் ஒப்போவுடன் இணைக்கப்படுவதாக இருநிறுவனங்களும் அறிவித்தன. அதன்படி ஆக்சிஜன் ஒஎஸ் கஸ்டம் ரோம் ஒப்போவின் கலர் ஒஎஸ் உடன் இணைக்கப்பட இருக்கிறது. இணைப்புக்கு பின் ஆக்சிஜன் ஒஎஸ்-இல் அதிக மாற்றங்கள் இருக்காது என்றே ஒன்பிளஸ் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News