செய்திகள்
அயதுல்லா சையத் அலி கமேனி

ஈரானில் 3,780 சிறை கைதிகளுக்கு பொதுமன்னிப்பு - மத தலைவர் கமேனி ஒப்புதல்

Published On 2020-11-05 21:02 GMT   |   Update On 2020-11-05 21:02 GMT
ஈரானில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 3,780 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்க மத தலைவர் கமேனி ஒப்புதல் அளித்துள்ளார்.
டெக்ரான்:

ஈரானில் மத தலைவர் அயதுல்லா சையத் அலி கமேனி, அந்த நாட்டின் உச்ச தலைவராக உள்ளார். அவருக்கு உயர்ந்த அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அவர், அங்கு பொது மற்றும் புரட்சிகர கோர்ட்டுகளால் தண்டித்து, சிறையில் அடைக்கப்பட்டுள்ள 3,780 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்க ஒப்புதல் அளித்துள்ளார்.

நபிகள் நாயகத்தின் பிறந்த நாள் விழாவையொட்டி இந்த பொது மன்னிப்பை அவர் வழங்கி உள்ளார் என ஈரானில் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

இதற்கான பரிந்துரையை ஈரான் நீதித்துறையின் தலைவர் அயதுல்லா இப்ராகிம் ரெய்சி செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே பெல்ஜியத்தில் கடந்த 2018-ம் ஆண்டு, ஜூலை மாதம் 1-ந்தேதியன்று ஆஸ்திரியா நாட்டுக்கான ஈரான் தூதரக உயர் அதிகாரி அசதுல்லா ஆசாதி கைது செய்யப்பட்ட விவகாரத்தில், ஐ.நா. சபை தலையிட்டு அவரை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஈரானிய பேராசிரியர்கள், வக்கீல்கள், நீதிபதிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.


Tags:    

Similar News