ஆன்மிகம்
ஆண்டாள்

இந்த வார விசேஷங்கள் 30.7.2019 முதல் 5.8.2019 வரை

Published On 2019-07-30 03:10 GMT   |   Update On 2019-07-30 03:10 GMT
ஜூலை மாதம் 30-ம் தேதியில் இருந்து ஆகஸ்டு மாதம் 5-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
30-ந்தேதி (செவ்வாய்) :

* மாத சிவராத்திரி.
* ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் தங்க விருட்ச சேவை.
* நாகப்பட்டினம் நீலாயதாட்சி அம்மன் காலை அன்ன வாகனத்தில் பவனி.
* நயினார்கோவில் சவுந்திரநாயகி கோலாட்ட அலங்காரம், இரவு வெள்ளி விருட்ச சேவை.
* மன்னார்குடி செங்கமலத் தாயார் கருட வாகனத்தில் திருவீதி உலா.
* சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் சிங்க வாகனத்தில் உலா வருதல்.
* மேல்நோக்கு நாள்.

31-ந் தேதி (புதன்) :

* ஆடி அமாவாசை.
* ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ஐந்து பெரிய திருவடி சேவை.
* திருச்செந்தூர் சுப்பிரமணியர் கோவிலில் தீர்த்தாபிஷேகம்.
* சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் காமதேனு வாகனத்தில் பவனி.
* சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் பெருந்திருவிழா.
* திருவாடானை சிநேக வள்ளியம்மன், வெண்ணெய் தாழி சேவை, இரவு கமல வாகனத்தில் அம்மன் வீதி உலா.
* நயினார்கோவில் சவுந்திரநாயகி, வீணை கான சரஸ்வதி அலங்கார காட்சி, இரவு வெள்ளி கிளி வாகனத்தில் புறப்பாடு.
* ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் வெள்ளி தேரில் பவனி.
* சமநோக்கு நாள்.

1-ந் தேதி (வியாழன்) :

* மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் முளைகொட்டி உற்சவம் ஆரம்பம்.
* மதுரை கள்ளழகர் கருட சேவை.
* ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் தண்டியலில் பவனி, ரெங்கமன்னார் யானை வாகனத்தில் வீதி உலா.
* ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் காலை தங்கப் பல்லக்கிலும், இரவு குதிரை வாகனத்திலும் புறப்பாடு.
* நாகப்பட்டினம் நீலாயதாட்சி அம்மன் கயிலாய வாகனத்தில் வீதி உலா, இரவு மகிஷாசூரன் சம்ஹாரம்.
* நயினார்கோவில் சவுந்திரநாயகி அம்மன் சிவலிங்க பூஜை செய்தல்.
* மேல்நோக்கு நாள்.

2-ந்தேதி (வெள்ளி) :

* ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கண்ணாடி சப்பரத்தில் பவனி. ஆண்டாள் மடி மீது ரெங்கமன்னார் சயனத் திருக்கோலம்.
* ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன், திருவாடானை சிநேக வள்ளியம்மன், நயினார்கோவில் சவுந்திரநாயகி அம்மன் ஆகிய தலங்களில் ரத உற்சவம்.
* படைவீடு ரேணுகாம்பாள் திருவீதி உலா.
* கீழ்நோக்கு நாள்.

3-ந்தேதி (சனி) :

* ஆடிப்பெருக்கு.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் ஆடித்தபசு உற்சவம் ஆரம்பம், தங்கச் சப்பரத்தில் அம்மன் பவனி.
* அங்கமங்கலம் அன்னபூரணி அம்பாள் வளைகாப்பு உற்சவம்.
* அனைத்து நீர் நிலைகளிலும் ஆடி பதினெட்டாம் பெருக்கு விழா.
* ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் புஷ்பப் பல்லக்கிலும், ரெங்கமன்னார் குதிரை வாகனத்திலும் திருவீதி உலா.
* ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் காலை பல்லக்கில் பவனி.
* நாகப்பட்டினம் நீலாயதாட்சி அம்மன் பீங்கான் ரத உற்சவம்.
* கீழ்நோக்கு நாள்.

4-ந்தேதி (ஞாயிறு) :

* ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ரத உற்சவம்.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் காமதேனு வாகனத்தில் வீதி உலா.
* ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் வெள்ளி கமலத்தில், தவழ்ந்த கோலத்தில் தபசு மண்டபம் எழுந்தருளல், சுவாமி தங்க விருட்ச சேவை.
* மன்னார்குடி செங்கமலத் தாயார் ரத உற்சவம்.
* கீழ்நோக்கு நாள்.

5-ந்தேதி (திங்கள்) :

* கருட பஞ்சமி.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் சிம்ம வாகனத்தில் திருவீதி உலா.
* ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், ரெங்கமன்னார் வெட்டிவேர் சப்பரத்தில் பவனி.
* ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன், திருவாடானை சிநேக வள்ளியம்மன், நயினார்கோவில் சவுந்திரநாயகி ஆகிய தலங்களில் திருக்கல்யாண உற்சவம்.
* சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் மின்விளக்கு அலங்கார வெள்ளி விமானத்தில் புறப்பாடு.
* மதுரை மீனாட்சி அம்மன் விருட்ச சேவை.
* சமநோக்கு நாள்.

Tags:    

Similar News