செய்திகள்
கொரோனா தடுப்பூசி

நாகை மாவட்ட கிராமங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்

Published On 2021-06-18 11:41 GMT   |   Update On 2021-06-18 11:52 GMT
நாகை மாவட்ட கிராமங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.
திட்டச்சேரி:

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் ராராந்திமங்கலம் ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் ரேணுகாதேவி முருகவேல் தலைமை தாங்கினார். வட்டார மருத்துவ அலுவலர் அறிவொளி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுந்தரமூர்த்தி ஆகியோர் முகாமை தொடங்கி வைத்தனர்.இதில் ராராந்திமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட கிராம பகுதிகளை சேர்ந்த 250 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

ஆதலையூர் ஊராட்சியில் நடந்த தடுப்பூசி முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் தென்மதி சந்திரசேகர் தலைமை தாங்கினார். வட்டார மருத்துவ அலுவலர் அறிவொளி முகாமை தொடங்கி வைத்தார். இதில் ஆதலையூர் பகுதிகளை சேர்ந்த 300 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் அகரக்கொந்தகை ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் தமிழரசி பக்கிரிசாமி தலைமை தாங்கினார். வட்டார மருத்துவ அலுவலர் அறிவொளி, ஒன்றியக்குழு உறுப்பினர் ஜெயந்தி சுவாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமை உதவி கலெக்டர் மணிவேலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அகரக்கொந்தகை, வாழ்மங்கலம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 200 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

முகாமையொட்டி நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கொரோனாவில் இருந்து தற்காத்துக்கொள்ளும் முறை குறித்து பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் டாக்டர்கள் ஹரிதா, கவுசல்யா, ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ஜெயபால், ஊராட்சி செயலாளர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வேதாரண்யம் தாலுகா ஆதனூர் மற்றும் பல கிராம பகுதிகளில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. ஆதனூரில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சதாசிவம் தொடங்கி வைத்தார். இதில் ஊராட்சிமன்ற தலைவர் சந்திரா, துணை தலைவர் ரவிக்குமார், தி.மு.க. மாவட்ட மாணவரணி அமைப்பாளர் தாமரைச்செல்வன் உள்பட பலர் கலந்து கொணடனர். மருத்துவர் சுந்தர்ராஜன் தலைமையிலான மருத்துவ குழுவினர் தடுப்பூசி போட்டனர். இந்த சிறப்பு முகாமில் 1,000-க்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

திருமருகல் ஒன்றியம் போலகம் ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் பவுஜியாபேகம் அபுசாலி தலைமை தாங்கினார். வட்டார மருத்துவ அலுவலர் அறிவொளி, ஒன்றியக் குழு உறுப்பினர் லதா அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்து முகாமை தொடங்கி வைத்தார். இதில் போலகம் ஊராட்சி பகுதிகளை சேர்ந்த 200 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.இதில் மருத்துவர்கள் மணிவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News