ஆன்மிகம்
தாமிரபரணி ஆற்றுக்கு சிறப்பு ஆரத்தி

புஷ்கர விழா: தாமிரபரணி ஆற்றுக்கு சிறப்பு ஆரத்தி

Published On 2019-11-05 06:00 GMT   |   Update On 2019-11-05 06:00 GMT
புஷ்கர விழாவின் ஒரு ஆண்டு நிறைவு பெறுவதையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் தாமிரபரணி ஆற்றில் புனித நீராடி ஆற்றுக்கு சிறப்பு ஆரத்தி எடுத்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க 12 சிவாலயங்களில் இரண்டாவது சிவாலயமான திக்குறிச்சி மகாதேவர் ஆலயத்தின் படித்துறையில் கடந்த ஆண்டு குருபெயர்ச்சியை முன்னிட்டு 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் புஷ்கரவிழா நடந்தது இந்த புஷ்கர விழாவின் ஒரு ஆண்டு நிறைவு பெறுவதையொட்டி புஷ்கர நிறைவு விழா நேற்று நடந்தது.

இதையொட்டி அதிகாலை முதல் தமிழகம் கேரளாவை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தாமிரபரணி ஆற்றில் புனித நீராடி நதிக்காக நடைபெற்ற யாகங்கள் கலசாபிஷேகம் பாராயணங்கள் உள்பட பல்வேறு பூஜைகளில் கலந்து கொண்டதுடன், தாமிரபரணி ஆற்றுக்கு சிறப்பு ஆரத்தி எடுக்கப்பட்டது. திருக்கோவில் நிர்வாகம் மற்றும் திக்குறிச்சி பக்தர்கள் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News