செய்திகள்
பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள் மற்றும் வேனை படத்தில் காணலாம்.

புதுவையில் இருந்து மதுபாட்டில் கடத்திய வேன் பறிமுதல்- போலீசார் மடக்கி பிடித்தனர்

Published On 2020-01-10 14:07 GMT   |   Update On 2020-01-10 14:07 GMT
பொங்கல் பண்டிகைக்காக புதுவையில் இருந்து தமிழக பகுதிக்கு மதுபாட்டில் கடத்திய வேனை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சேதராப்பட்டு:

பொங்கல் பண்டிகையொட்டி புதுவையில் இருந்து தமிழக பகுதிக்கு மதுபாட்டில்கள் கடத்துவதை தடுக்க விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்திரவிட்டு இருந்தார். அதன்படி கலால்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு மதுபாட்டில் கடத்தலை தடுக்க மாநில எல்லைகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் கலால் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் போலீசார் இன்று அதிகாலை 3 மணி அளவில் புதுவை-கிளியனூர் சாலையில் சாதாரண உடையில் நின்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது புதுவையில் இருந்து பால் கொண்டு செல்வதுபோல் வந்த வேனை போலீசார் நிறுத்த முயன்றனர். ஆனால் அந்த வேன் நிற்காமல் வேகமாக சென்றது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வேனை மடக்கி பிடிக்க ஜீப்பில் பின்னால் விரைந்து சென்றனர். 

போலீசார்  பின் தொடர்ந்து வருவதை அறிந்ததும் வேனை ஓட்டி சென்ற டிரைவர் திடீரென வேனை நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார். இதைத் தொடர்ந்து வேனில் போலீசார் சோதனை நடத்தியபோது அந்த வேனில் பெட்டி பெட்டியாக மதுபாட்டில்கள் இருந்தது. மொத்தம் 50 பெட்டிகளில் 2400 குவாட்டர் பிராந்தி பாட்டில்களும், 50 லிட்டர் சாராயமும் இருந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும்.

இதையடுத்து மதுபாட்டிலும் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய வேனை போலீசார் பறிமுதல் செய்து டிரைவரை தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News