செய்திகள்
கருணாநிதியின் சிலையை திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் பேசியபோது எடுத்த படம்.

இந்திரா காந்தி தூதர்களின் சமாதானத்தை ஏற்க மறுத்து ஆட்சியை பறி கொடுத்தவர் கருணாநிதி - மு.க.ஸ்டாலின்

Published On 2019-09-22 13:00 GMT   |   Update On 2019-09-22 13:00 GMT
இந்திரா காந்தி தூதர்களின் சமாதானத்தை ஏற்க மறுத்து ஆட்சியை பறி கொடுத்தவர் கருணாநிதி என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.
ஈரோடு:

ஈரோட்டில் பன்னீர்செல்வம் பூங்கா அருகே அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலையை திறந்து வைத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- 

பெரும் போராட்டத்திற்கு பின் இந்த சிலை திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அண்ணா, எம்ஜிஆர், பெரியார் சிலைக்கு அருகில் கருணாநிதியின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்துக்காக பல தியாகங்களை செய்தவர் கருணாநிதி. தன்னுடைய கடைசி மூச்சு வரை அவர் மக்களுக்காக குரல் கொடுத்தார். 

கருணாநிதியின் அரசியல் பாசறை ஈரோடுதான். இந்திரா காந்தியின் எமர்ஜென்சியை எதிர்த்தவர் கருணாநிதி. இந்திரா காந்தி தூதர்களின் சமாதானத்தை ஏற்க மறுத்து ஆட்சியை பறி கொடுத்தவர் கருணாநிதி. 

கருணாநிதியின் வாழ்க்கையே போராட்டம் தான், பள்ளியிலும் போராடியே சேர்ந்தார். கல்லக்குடி என பெயர் மாற்றத்துக்காக போராட்டம் நடத்தியவர் கருணாநிதி. இப்போது பெரும் போராட்டத்திற்கு பின் அதேபோல் அவரின் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலையை திறந்து வைத்தது பெரிய மனநிறைவை தருகிறது, என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News