செய்திகள்
கோப்புபடம்

தென்னந்தோப்புகளில் ஊடுபயிராக சின்னவெங்காயம் சாகுபடி

Published On 2021-07-20 10:07 GMT   |   Update On 2021-07-20 10:07 GMT
தென்னை மரச்சாகுபடியில் ஊடுபயிர் செய்வதால் விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும்.
உடுமலை:

உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களில் தென்னை சாகுபடி பிரதானமாக உள்ளது. நீண்ட கால பயிராக பராமரிக்கப்படும் தென்னை மரச்சாகுபடியில் ஊடுபயிர் செய்வதால் விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும். அவ்வகையில் தற்போது தென்னங்கன்றுகள் நட்டு, மூன்று ஆண்டுகள் வரை பல்வேறு ஊடுபயிர் செய்கின்றனர். தற்போது பரவலாக சின்னவெங்காயம் ஊடுபயிராக சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில்:

தென்னையில் ஊடுபயிராக தக்காளி, கத்தரி, மக்காச்சோளம், சின்னவெங்காயம் உள்ளிட்ட சாகுபடிகளை செய்து வருகிறோம். ஊடுபயிருக்கும், தென்னங்கன்றுகளுக்கும் உர, நீர் மேலாண்மையை முறையாக பின்பற்றினால் இரு சாகுபடியும் பாதிக்காது என்றனர்.
Tags:    

Similar News