தொழில்நுட்பம்
மைக்ரோமேக்ஸ் ஆண்ட்ராய்டு டி.வி.

ஸ்மார்ட்போன் விலையில் மைக்ரோமேக்ஸ் ஆண்ட்ராய்டு டி.வி. இந்தியாவில் அறிமுகம்

Published On 2019-07-10 10:17 GMT   |   Update On 2019-07-10 10:24 GMT
மைக்ரோமேக்ஸ் நிறுவனம் இந்தியாவில் ஸ்மார்ட்போன் விலையில் ஆண்ட்ரய்டு டி.வி.யை அறிமுகம் செய்துள்ளது.



மைக்ரோமேக்ஸ் நிறுவனம் இந்தியாவில் கூகுள் சான்று பெற்ற ஆண்ட்ராய்டு டி.வி. மாடல்களை அறிமுகம் செய்தது. இவற்றின் விலை ரூ. 13,999 முதல் துவங்குகிறது. 32 இன்ச், 40 இன்ச் மற்றும் 43 இன்ச் அளவுகளில் கிடைக்கும் ஆண்ட்ராய்டு டி.வி. மாடல்களில் 16:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ கொண்டிருக்கின்றன.

இந்தியாவில் புதிய டி.வி. மாடல்கலின் விற்பனை ஜூலை 11 ஆம் தேதி முதல் துவங்குகிறது. இவை ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகின்றன.



புதிய மைக்ரோமேக்ஸ் ஆண்ட்ராய்டு டி.வி. மாடல்களில் பயனர்கள் கூகுள் பிளே ஸ்டோர், கேம்கள், திரைப்படங்கள் மற்றும் இசை உள்ளிட்ட சேவைகளை பயன்படுத்த முடியும். இத்துடன் பில்ட் இன் க்ரோம்காஸ்ட் வசதியும் வழங்கப்படுகிறது. இதுதவிர கூகுள் அசிஸ்டண்ட் சேவையும் இருப்பதால், பயனர்கள் தங்களின் குரல் மூலம் தேடல்களை மேற்கொள்ளலாம்.

புதிய டி.வி. மாடல்களின் விரிவான அம்சங்களை மைக்ரோமேக்ஸ் இதுவரை அறிவிக்கவில்லை. ஆண்ட்ராய்டு டி.வி. மாடல்களுடன் மைக்ரோமேக்ஸ் புதிய டாப் லோடிங் வாஷிங் மெஷின் ஒன்றையும் அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை ரூ. 10,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News