ஆன்மிகம்
சிதம்பரம் நடராஜருக்கு தங்க வில்வ திருவாபரணம்

சிதம்பரம் நடராஜருக்கு தங்க வில்வ திருவாபரணம்

Published On 2020-01-03 04:03 GMT   |   Update On 2020-01-03 04:03 GMT
சிவலோக திருமடம் சார்பில் சிதம்பர ரகசியத்தில் பொருத்த தங்கத்தாலான வில்வத்தில் சிவபுராணம் பதித்த திருவாபரணம் நடராஜர் கோவில் பொதுதீட்சிதர்களிடம் வழங்கப்பட்டது.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் சென்னை சிவலோக திருமடம் சார்பில் கடந்த 31-ந் தேதி ருத்ராபிஷேகம் நடைபெற்றது. இதை தொடர்ந்து அந்த மடத்தின் சார்பில் சிதம்பரம் மவுன மடத்திலிருந்து குருமகா சந்நிதானம் ஸ்ரீசுந்தரமூர்த்தி சுவாமிகள் தலைமையில் தங்க வில்வ சிவபுராண திருவாபரணம் வீதிஉலா நடைபெற்றது.

இந்த வீதிஉலாவை செல்வரத்தின தீட்சிதர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த வீதிஉலா முக்கிய வீதிகள் வழியாக சென்று நடராஜர் கோவிலில் முடிவடைந்தது. இதையடுத்து சிவலோக திருமடம் சார்பில் சிதம்பர ரகசியத்தில் பொருத்த தங்கத்தாலான வில்வத்தில் சிவபுராணம் பதித்த திருவாபரணம் நடராஜர் கோவில் பொதுதீட்சிதர்களிடம் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News