செய்திகள்
பூமி பூஜையை எம்.எஸ்.எம்.ஆனந்தன் எம்.எல்.ஏ., தொடங்கி வைத்த காட்சி.

முதலிபாளையம் ஊராட்சியில் வளர்ச்சி பணிகளுக்கு பூமிபூஜை - எம்.எஸ்.எம்.ஆனந்தன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

Published On 2021-11-25 07:31 GMT   |   Update On 2021-11-25 07:31 GMT
மாவட்ட ஊராட்சி நிதி, ஊராட்சி ஒன்றிய நிதி என மொத்தம் ரூ.28 லட்சத்து 43 ஆயிரத்தில் பல்வேறு பகுதிகளில் வளர்ச்சிப்பணிகளுக்கு பூமிபூஜை போடப்பட்டது.
திருப்பூர்:

பல்லடம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முதலிபாளையம் ஊராட்சியில் பல்வேறு வளர்ச்சி பணிகளுக்காக பூமி பூஜை போடப்பட்டது. அதனை பல்லடம் தொகுதி எம்.எஸ்.எம்.ஆனந்தன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ.,கரைப்புதூர் நடராஜன், மாவட்ட ஊராட்சி தலைவர் சத்தியபாமா, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சாமிநாதன் கலந்து கொண்டனர்.

முதலிபாளையம் ஊராட்சி ஆதிதிராவிடர் காலனியில், வெள்ளக்கரடு மற்றும் நீலிக்காடு பாரதி நகர் ஆகிய பகுதிகளில் 3 இடங்களில் ஆழ்குழாய் கிணறு அமைத்தல், வெள்ளக்கரடு சிவசக்தி நகர் பகுதியில் வடிகால் அமைத்தல், மாணிக்காபுரம், வேப்பங்காடு, அங்காளம்மன் நகரில் புதிய தார்சாலை அமைத்தல்.

மேலும் முத்துநகர், ஜி.பி.என்.நகரில் புதிய தார்சாலை அமைத்தல் மற்றும் மாவட்ட ஊராட்சி நிதி, ஊராட்சி ஒன்றிய நிதி என மொத்தம் ரூ.28 லட்சத்து 43 ஆயிரத்தில் பல்வேறு பகுதிகளில் வளர்ச்சிப்பணிகளுக்கு பூமி பூஜை போடப்பட்டு பணிகளை தொடங்கினர். 

அதில் ஒன்றியக்குழு உறுப்பினர் சுலோச்சனா, ஊராட்சி தலைவர் மயூரிபிரியா, ஒன்றியக்குழு உறுப்பினர் கல்பனா வேலுச்சாமி, ஊராட்சி துணைத்தலைவர் சுமதிசெந்தில், கூட்டுறவு சங்க தலைவர் கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் துணைத்தலைவர் நடராஜ், ஊராட்சி செயலர் ராஜசேகரன் உள்பட வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News