செய்திகள்
திருப்பதி தேவஸ்தான இணையதளம்

திருப்பதி தேவஸ்தான இணையதளம் முடங்கியது

Published On 2020-12-01 08:12 GMT   |   Update On 2020-12-01 08:12 GMT
ஆன்லைனில் பதிவுசெய்ய ஒரே நேரத்தில் 1½ லட்சம் பேர் முயன்றதால் திருப்பதி தேவஸ்தான இணையதளம் முடங்கியது.
திருப்பதி:

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க மாதம் தோறும் ரூ.300 தரிசன டிக்கெட்டுகள் அந்தந்த மாதத்திற்கு முன்பாகவே தேவஸ்தான இணைய தளத்தில் வெளியிடப்படும். அதன்படி டிசம்பர் மாதத்திற்கான 19 ஆயிரம் ரூ.300 தரிசன டிக்கெட் ஆன்லைனில் வெளியிடப்பட்டது.

இந்த தரிசன டிக்கெட்டுகளை இந்தியாவிலிருந்து மட்டும் அல்லாமல் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆன்லைன் மூலம் பக்தர்கள் முன்பதிவு செய்ய முயன்றனர்.

ஆன்லைனில் பதிவுசெய்ய ஒரே நேரத்தில் 1½ லட்சம் பேர் முயன்றதால் தேவஸ்தான இணையதளம் முடங்கியது.

தேவஸ்தான இணையதளம் ஒரே நேரத்தில் 20 ஆயிரம் முன்பதிவுகளை மட்டுமே தாங்கும் திறன் கொண்டது. தகவல் தொழில்நுட்ப துறையினர் அதனை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

5 மணி நேரத்திற்கு பிறகு சரிசெய்யப்பட்டது. மாலை 4 மணி முதல் தேவஸ்தான இணையதளம் மீண்டும் செயல்பட தொடங்கியது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழக்கமாக வைகுண்ட ஏகாதசி மற்றும் துவாதசி ஆகிய 2 நாட்களில் மட்டுமே வைகுண்ட வாசல் வழியாக பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

ஆனால் இந்தாண்டு முதல் முறையாக தொடர்ந்து 10 நாட்கள் வைகுண்ட வாசல் வழியாக பக்தர்களை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி வருகிற 25-ந்தேதி முதல் ஜனவரி 3-ந்தேதி வரை வைகுண்ட வாசல் திறக்கப்படும்.

அதற்குண்டான ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்கள் இன்று காலை 11 மணியளவில் வெளியிடப்பட்டது. பக்தர்கள் ஆர்வமுடன் முன்பதிவு செய்தனர்.
Tags:    

Similar News