செய்திகள்
சம்பித் பத்ரா

காங். ஆளும் மாநிலங்களில் தலித்துகளுக்கு எதிராக கொடுமை: ராகுல், பிரியங்கா மவுனம் காப்பது ஏன்?- பா.ஜனதா விமர்சனம்

Published On 2021-10-12 10:59 GMT   |   Update On 2021-10-12 13:09 GMT
லக்கிம்பூர் வன்முறைக்கு எதிராக ராகுல் காந்தி, பிரியங்கா குரல் கொடுத்து வரும் நிலையில், தலித் கொடுமைக்கு எதிராக மவுனம் காப்பது ஏன்? என பா.ஜனதா கேள்வி எழுப்பியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் ஏற்பட்ட வன்முறையில் விவசாயிகள் உள்பட 8 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு ராகுல் காந்தி, பிரியங்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். விவசாயிகள் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினர். அவர்கள் உரிமைக்காக தொடர்ந்து போராடுவோம் எனத் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் தலித்துகளுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை பார்த்து மவுனம் காப்பது ஏன்? என பா.ஜனதா விமர்சனம் செய்துள்ளது.

பா.ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறுகையில் ‘‘ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் தலித் உரிமைகளை காப்பதில் சாம்பியன் என்று தாங்களாகவே சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால், தலித் மக்களுக்கு எதிராக ராஜஸ்தான், மற்ற மாநிலங்களில் நடக்கும் கொடுமைக்கு எதிராக ஏன் மவுனமாக உள்ளார்கள்.



காங்கிரஸ் கட்சியினர் லக்கிம்பூர் வன்முறைக்கு பிறகு அரசியல் சுற்றுலா செல்கிறார்கள். ஆனால், தலித்துகளுக்கு எதிராக கொடுமை நடக்கும்போது, ஏன் அங்கு செல்லவில்லை’’ என்றார்.
Tags:    

Similar News