உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

சங்கில் நிரப்பிய நீர் எல்லா நோயையும் தீர்க்கும் - ஆன்மீக சொற்பொழிவாளர் பேச்சு

Published On 2022-05-07 08:00 GMT   |   Update On 2022-05-07 08:00 GMT
மனம் இல்லை என்றால் நாம் மனிதன் இல்லை. இறைவன் இன்பத்தை நமக்கு கொடுக்கவே கோவிலுக்கு வர வைக்கிறார்.
திருப்பூர்:

திருப்பூர் கணபதிபாளையம் மலையம்பாளையத்தில் உள்ள வடுகநாத சுவாமி கோவில் 13ம் ஆண்டு விழா நடந்தது. இதில் தீர்த்தத்தின் மகிமை என்ற தலைப்பில் சொற்பொழிவாளர் அனந்தகிருஷ்ணன் பேசியதாவது:-

மனம் இல்லை என்றால் நாம் மனிதன் இல்லை. இறைவன் இன்பத்தை நமக்கு கொடுக்கவே கோவிலுக்கு வர வைக்கிறார். பேரொளியை காட்டும் இடமே கோவில். உலகிலுள்ள இன்பங்களுக்கு பெயர் சிற்றின்பம்.பேரின்பத்தை காட்ட இறைவன் கோவிலுக்கு வர வைக்கிறான். 

ஆயிரம் இடம்புரி சங்கு உண்டாகும் இடத்தில் ஒரே ஒரு வலம்புரி சங்கு உருவாகும் என்று கூறப்படுகிறது. அப்படியானால், 108 வலம்புரி சங்குகள் தேவையெனில் பல ஆண்டுகள் வேண்டும். ஆயிரம் வலம்புரி சங்குக்கு பின் பாஞ்சஜன்ய சங்கும், ஆயிரம் பாஞ்சஜன்ய சங்குக்கு பின் சலம் சங்கும் கிடைக்கும். 

பிற நாட்டின் பெருமையை பேசும் நமக்கு வலம்புரி சங்கின் பெருமை தெரிவதில்லை. ஒரு சங்கில் குறிப்பிட்ட நேரம் புனித நீர் இருந்தால் அது மருத்துவ தன்மை பெறுகிறது. தீயை விட கடும் பொருள் இல்லை. தீயில் வெந்த பின்னரும் சங்கு மாறாது. அப்படிப்பட்ட சங்கில் நிரப்பிய நீர் எல்லா நோயையும் தீர்க்கும் வல்லமை பெற்றது.இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News