செய்திகள்
நிர்மலா சீதாராமன்

மாநிலங்களவையிலும் நிதி மசோதா நிறைவேறியது - நிர்மலா சீதாராமன் பெருமிதம்

Published On 2021-03-25 00:25 GMT   |   Update On 2021-03-25 00:25 GMT
2021-22-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் கடந்த மாதம் 1-ந்தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிதி மசோதா நேற்று முன்தினம் மக்களவையில் நிறைவேறியது.
புதுடெல்லி:

2021-22-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் கடந்த மாதம் 1-ந்தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிதி மசோதா நேற்று முன்தினம் மக்களவையில் நிறைவேறியது. முன்னதாக அதில் பரிந்துரைக்கப்பட்ட 127 திருத்தங்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டு இருந்தன.

இதைத்தொடர்ந்து இந்த மசோதா மாநிலங்களவைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு நேற்று விவாதம் நடந்தது. முடிவில் மசோதாவும், அதில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களும் குரல் ஓட்டு மூலம் நிறைவேறியது. பின்னர் எந்தவித திருத்தமோ, பரிந்துரையோ இன்றி மக்களவைக்கு மீண்டும் அனுப்பி வைக்கப்பட்டது. இவ்வாறு இந்த மசோதா நாடாளுமன்ற ஒப்புதலை பெற்று இருக்கிறது.

முன்னதாக மாநிலங்களவையில் இந்த மசோதா மீதான விவாதங்களுக்கு நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பதிலளித்து பேசினார். அப்போது அவர், நிதி மசோதாவில் உள்ள அதிக பற்றாக்குறையின் விளைவாக இந்தியாவின் இறையாண்மை மதிப்பீடு தரமிறக்கப்படும் அபாயம் இல்லை என தெரிவித்தார். குறைவான பணவீக்கம், அதிக ஜி.டி.பி. வளர்ச்சி, சாதனை அளவான அன்னிய முதலீடு மற்றும் குறைவான நிதி பற்றாக்குறையை சுட்டிக்காட்டிய நிர்மலா சீதாராமன், இது பொருளாதாரத்தை அரசு சிறப்பாக கையாளுவதன் வெளிப்பாடு எனவும் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
Tags:    

Similar News