செய்திகள்
வைரல் வீடியோ ஸ்கிரீன்ஷாட்

அந்த காரணத்திற்காக சொந்த கட்சி அலுவலகத்தை சூரையாடியதாக வைரலாகும் வீடியோ

Published On 2021-05-04 05:16 GMT   |   Update On 2021-05-04 05:16 GMT
பாஜக கட்சி பிரமுகர்கள் தங்களின் கட்சி அலுவலகத்தை சூரையாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


பாஜக கட்சி அலுவலகம் சூரையாடப்படும் பகீர் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வைரல் வீடியோவில் பாஜக கொடி ஏந்திய நபர்கள் மற்றும் சில பெண்கள் இணைந்து கட்சி அலுவலகத்தை சூரையாடும் காட்சிகள் இடம்பெற்று இருக்கின்றன.

இந்தியாவில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை எதிர்த்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. `ஆக்சிஜன் கிடைக்காததை அடுத்து பாஜக பணியாளர்கள் தங்களின் சொந்த கட்சி அலுவலகத்தை சூரையாடுகின்றனர்,' எனும் தலைப்பில் வீடியோ பகிரப்படுகிறது.



வைரல் வீடியோவை ஆய்வு செய்ததில், அது மேற்கு வங்க மாநிலத்தின் மால்டா மாவட்டத்தில் எடுக்கப்பட்ட வீடியோ என தெரியவந்துள்ளது. மேலும் இந்த சம்பவம் அக்கட்சி வேட்பாளரை மாற்றக்கோரி நடத்தப்பட்டது என தெரியவந்துள்ளது. ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக பாஜக-வினர் கட்சி அலுவலகத்தை தாக்கியதாக கூறும் தகவல் எதுவும் இணையத்தில் கிடைக்கப்பெறவில்லை.

அந்த வகையில், வைரல் வீடியோ நாட்டில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டத்தில் எடுக்கப்படவில்லை என உறுதியாகிவிட்டது.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
Tags:    

Similar News