செய்திகள்
உப்பாறு அணை.

பி.ஏ.பி.. திட்டம் மூலம் உப்பாறு அணைக்கு தண்ணீர்-விவசாயிகள் எதிர்பார்ப்பு

Published On 2021-07-22 11:07 GMT   |   Update On 2021-07-22 11:07 GMT
குடிநீர் தேவைக்காக உப்பாறு ஓடை விவசாயிகள் போராட்டம் நடத்திய நிலையில் சில முறை மட்டும் தண்ணீர் திறக்கப்பட்டது.
உடுமலை, ஜூலை: 

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தாலுகா கெத்தல்ரேவ் பகுதியில் கடந்த 1965-ம் ஆண்டு உப்பாறு அணை கட்டப்பட்டது. சுற்றுப்பகுதியைச்சேர்ந்த  6 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டிருந்தது. பி.ஏ.பி., திட்டத்தில் 2  மண்டல பாசனம் செயல்பாட்டில் இருந்த போது  உப்பாறு அணைக்கு பிரதான கால்வாயில் உடுமலை அருகே உள்ள அரசூர் ஷட்டர் வழியாக உப்பாறு ஓடையில் தண்ணீர் திறக்கப்படும். 

ஓடை அரசூரிலிருந்து அம்மாபட்டி, ஆமந்தகடவு, பெரியபட்டி, பூளவாடி உட்பட பல்வேறு கிராமங்கள் வழியாக உப்பாறு அணைக்கு செல்லும். இந்த ஓடையில் கட்டப்பட்டுள்ள 20க்கும் மேற்பட்ட தடுப்பணைகள் வாய்க்காலில் தண்ணீர்திறக்கும் போது நிரம்பி சுற்றுப்பகுதி நிலத்தடி நீர் மட்டத்திற்க  உதவியாக இருக்கும். பி.ஏ.பி., திட்டம் 1994-ல் நான்கு மண்டலமாக விரிவுபடுத்தப்பட்டது. 

இதனால் பி.ஏ.பி., பிரதான கால்வாயிலிருந்து  உப்பாறு ஓடைக்கு தண்ணீர் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டது.குடிநீர் தேவைக்காக உப்பாறு ஓடை விவசாயிகள் போராட்டம் நடத்திய நிலையில் சில முறை மட்டும் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் அரசூர் முதல் உப்பாறு அணை வரையுள்ள பகுதிகளில் உப்பாறு ஓடை படுகை பகுதியில்  வறட்சி நிரந்தரமாகியுள்ளது.பல ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களில் மீண்டும் சாகுபடி மேற்கொள்ள பி.ஏ.பி., கால்வாயில் இருந்து  உப்பாறு ஓடை வழியாக தண்ணீர் திறக்க விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News