உள்ளூர் செய்திகள்
மேல்முறையீடு

நகை தள்ளுபடிக்கான மேல்முறையீட்டு மனு

Published On 2022-05-05 10:58 GMT   |   Update On 2022-05-05 10:58 GMT
நகை தள்ளுபடிக்கான மேல்முறையீடு செய்ய 7-ந் தேதி கடைசி நாள் என கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் தகவல் தெரிவித்துள்ளார்.
மதுரை

மதுரை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் குருமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது:-

முதலமைச்சரால் கூட்டுறவு நிறுவனங்களில்  ஒரு குடும்பத்தில் 5 பவுனுக்கு உட்பட்டு பெறப்பட்ட பொது நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று வழங்கப்பட்ட அறிவி ப்பினை செயல்படுத்த ஏதுவாக மதுரை மாவட்டத்தில் பொது நகைக்கடன் தள்ளுபடிக்கு தகுதி வாய்ந்தோர் பெயர்பட்டியல் madurai.nic.in என்ற மதுரை மாவட்ட கலெக்டரின் இணையதளத்தில் கடந்த 8-ந்தேதி வெளியிடப்பட்டுள்ளது.  

நகைக்கடன் தள்ளுபடி பெயர் பட்டியலில் இடம் பெறாதோர், அதற்குரிய முறையீட்டினை மேற்கண்ட இணையதளத்தில் வெளியிடப்பட்ட ஒரு மாத காலத்துக்குள் மதுரை சரக துணைப்பதிவாளர், உசிலம்பட்டி சரக துணைப்பதிவாளர் அல்லது மதுரை மண்டல இணைப்பதிவாளர் ஆகியோருக்கு எழுத்துப்பூர்வமாக தகுந்த ஆதாரஙகளுடன் மேல்முறையீடு செய்து தீர்வுகாண வேண்டும். 
 
ஒரு மாத காலத்துக்கு பின்னர் பெறப்படும் எந்த ஒரு முறையீடும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. வருகிற 7ந்தேதி (சனிக்கிழமை) மேல்முறையீடு செய்ய கடைசிநாள் ஆகும். 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News