கார்
மெர்சிடிஸ் பென்ஸ் இ.கியூ.எஸ்.

சோதனையில் அசத்திய மெர்சிடிஸ் பென்ஸ் கார்

Published On 2021-12-20 07:27 GMT   |   Update On 2021-12-20 07:27 GMT
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் இ.கியூ.எஸ். மாடல் பாதுகாப்பு சோதனையில் அசத்தி இருக்கிறது.


2021 மெர்சிடிஸ் பென்ஸ் இ.கியூ.எஸ். மாடல் யூரோ என்கேப் (NCAP) பாதுகாப்பு சோதனையில் ஐந்து நட்சத்திர புள்ளிகளை பெற்று அசத்தி இருக்கிறது. ஆடம்பர எலெக்ட்ரிக் செடான் மாடலான இ.கியூ.எஸ். பெரியவர்கள் பயணிக்கும் பாதுகாப்பில் 96 சதவீதம் புள்ளிகளையும், குழந்தைகள் பயணிக்கும் போது 91 சதவீத புள்ளிகளையும் பெற்று இருக்கிறது. 

இந்த ஆண்டு யூரோ பாதுகாப்பு சோதனையில் பங்கேற்ற எந்த கார் மாடலும் இத்தனை புள்ளிகளை பெறவில்லை. 2480 கிலோ எடை கொண்டிருக்கும் பென்ஸ் எலெக்ட்ரிக் கார் சேஃப்டி அசிஸ்ட் பிரிவில் 80 சதவீத புள்ளிகளை பெற்றுள்ளது. சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஆடம்பர எலெக்ட்ரிக் செடான் மாடல் பல்வேறு உயர் தொழில்நுட்பங்களை கொண்டிருக்கிறது.



புதிய எலெக்ட்ரிக் கார் இரண்டு விதமான பேட்டரி பேக் கொண்டிருக்கிறது. இந்த கார் இ.கியூ.எஸ்.450 மற்றும் இ.கியூ.எஸ்.580 4மேடிக் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவை முறையே 333 ஹெச்.பி. திறன், 523 ஹெச்.பி. திறன் வெளிப்படுத்துகிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 700 கிலோமீட்டர் வரை செல்லும்.
Tags:    

Similar News