செய்திகள்
கவச உடையில் வந்த மாணவி

நீட் தேர்வு எழுத கொரோனா கவச உடையில் வந்த மாணவி

Published On 2020-09-13 18:57 GMT   |   Update On 2020-09-13 18:57 GMT
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த தேர்வு மையத்துக்கு வந்திருந்த மாணவி ஒருவர் கொரோனா பாதுகாப்பு கவச உடையை (பி.பி.இ.) அணிந்து வந்து தேர்வு எழுதினார்.
கொரோனா நோய்த் தொற்று காரணமாக, பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் ‘நீட்’ தேர்வை பாதுகாப்பாக நடத்த தேசிய தேர்வு முகமை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து இருந்தது.

அதிலும் ஒருபடி அதிகமாக, சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த தேர்வு மையத்துக்கு வந்திருந்த மாணவி ஒருவர் கொரோனா பாதுகாப்பு கவச உடையை (‘பி.பி.இ.) அணிந்து இருந்தார். தேர்வு மைய நுழைவு வாயிலில் அவருக்கு ‘தெர்மல் ஸ்கேனர்’ மூலம் உடல் வெப்பநிலையை அறியும் சோதனையும், எலெக்ட்ரானிக் பொருட்களை கண்டறியும் ‘மெட்டல் டிடெக்டர்’ ஸ்கேனர் கருவியை கொண்டு சோதனையும் நடத்தி அவரை உள்ளே அனுப்பினார்கள்.

ஆனால் உள்ளே சென்ற அந்த மாணவியை பாதுகாப்பு கவச உடையுடன் தேர்வு எழுத அனுமதித்தனரா? அல்லது அதை அகற்ற சொன்னார்களா? என்ற தகவலை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. மாணவி கொரோனா கவச உடை அணிந்து வந்தது, தேர்வு எழுத வந்திருந்த பிற மாணவர்களையும், பெற்றோரையும் திரும்பிப்பார்க்க வைத்தது.
Tags:    

Similar News