செய்திகள்
கோப்புபடம்

இலங்கையில் பிச்சை எடுத்தாலும், கொடுத்தாலும் தண்டனை

Published On 2020-11-19 06:07 GMT   |   Update On 2020-11-19 06:07 GMT
இலங்கையில் பிச்சை எடுத்தாலும், பிச்சை கொடுத்தாலும் தண்டனை விதிக்கப்படும் என்று போலீசார் அதிரடியாக அறிவித்துள்ளனர்.


இலங்கையில் பிச்சை எடுத்தாலும், பிச்சை கொடுத்தாலும் தண்டனை விதிக்கப்படும் என்று போலீசார் அதிரடியாக அறிவித்துள்ளனர். இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரி அஜித்ரோஹணா கூறியதாவது:-

கொழும்பு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பிச்சை எடுப்பவர்களில் 95 சதவீதம் பேர் உண்மையான யாசகர்கள் கிடையாது. வர்த்தக நோக்கத்துடன் பிச்சை எடுப்பவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து இருக்கிறது. ஒரு நபரின் வழிகாட்டுதலின்படி பெரும்பாலானோர் பிச்சை எடுக்கிறார்கள். அவர்களுக்கு தினமும் சம்பளம் வழங்கப்படுவது விசாரணையில் தெரியவந்துள்ளது.

போக்குவரத்து சிக்னல்களில் பிச்சை எடுப்பவர்களால் நெரிசல் ஏற்படுகிறது. இதனால் சிக்னல் அருகே பிச்சை எடுப்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல சிக்னல் பகுதியில் பிச்சை அளிப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். உண்மையாக பிச்சை எடுப்பவர்கள் குறித்து சமூக சேவை நிறுவனங்களுடன் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும்.உண்மையாக பிச்சை எடுப்பவர்கள் பிரதான நகரங்களிலும், சிக்னல் பகுதியிலும் பிச்சை எடுப்பதில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News