ஆன்மிகம்
பள்ளிபாளையம் ஓம் காளியம்மன் கோவில் திருவிழா

பள்ளிபாளையம் ஓம் காளியம்மன் கோவில் திருவிழா

Published On 2021-03-06 05:52 GMT   |   Update On 2021-03-06 05:52 GMT
பள்ளிபாளையம் காவிரி ஆற்றங்கரையில் 24 மனை தெலுங்கு செட்டியார் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ ஓம் காளியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.
பள்ளிபாளையம் காவிரி ஆற்றங்கரையில் 24 மனை தெலுங்கு செட்டியார் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ ஓம் காளியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. விழாவில் நேற்று காலை 8 மணிக்கு சமூகத்தில் மொத்தம் உள்ள 7 கோத்திரத்தில் ஏழு பெண் குழந்தைகளை (கன்னிமார்கள் சாமிகள்) தேர்ந்தெடுத்து அவர்களுக்கு மஞ்சள் புத்தாடைகளை வழங்கி ஊர்வலமாக அழைத்து வந்தனர். பின்னர் கோவிலில் சாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து மதியம் 1 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தொடர்ந்து நாதஸ்வர நிகழ்ச்சியுடன் சிம்ம வாகனத்தில் அம்மன் திருவீதி உலா நடந்தது. இதையடுத்து வாணவேடிக்கை, நாதஸ்வரம், பேண்ட் வாத்தியம், போன்ற இசைக்கருவி வாத்தியங்களுடன் சாமி திருவீதி உலா நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டி மற்றும் 24 மனை தெலுங்கு செட்டியார் சமூகத்தினர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News