ஆன்மிகம்
வெள்ளி இமயகிரி வாகனத்தில் பகவதி அம்மன் பவனி

நவராத்திரி 7-ம் நாள் திருவிழா: வெள்ளி இமயகிரி வாகனத்தில் பகவதி அம்மன் பவனி

Published On 2020-10-24 04:08 GMT   |   Update On 2020-10-24 04:08 GMT
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி 7-ம் நாளான நேற்று பலவண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி இமயகிரி வாகனத்தில் அம்மன் எழுந்தருளி கோவிலின் வெளிப்பிரகாரத்தை சுற்றி மேளதாளம் முழங்க 3 முறை பவனி வந்த நிகழ்ச்சி நடந்தது.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா 17-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் 7-வது நாளான நேற்று அதிகாலை 5 மணிக்கு அம்மனுக்கு 8 வகையான வாசனை திரவியங்களால் அஷ்டாபிஷேகம், பகல் 11.30 மணிக்கு அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரத்துடன் சிறப்பு தீபாராதனை போன்றவை நடந்தது. இரவு 8 மணிக்கு பலவண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி இமயகிரி வாகனத்தில் அம்மன் எழுந்தருளி கோவிலின் வெளிப்பிரகாரத்தை சுற்றி மேளதாளம் முழங்க 3 முறை பவனி வந்த நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சியில் அகஸ்தீஸ்வரம் யூனியன் தலைவரும் அறங்காவலர்குழு உறுப்பினருமான அழகேசன், அறங்காவலர்குழு உறுப்பினர் சதாசிவம், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளர் ஆறுமுகநயினார், பொருளாளர் ரமேஷ், கன்னியாகுமரி பகவதிஅம்மன் பக்தர்கள் சங்க செயலாளர் முருகன் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News