ஆட்டோமொபைல்
மஹிந்திரா டி.யு.வி.300

2020 மஹிந்திரா டி.யு.வி.300 பிளஸ் ஸ்பை படங்கள்

Published On 2019-08-20 11:41 GMT   |   Update On 2019-08-20 11:41 GMT
மஹிந்திரா நிறுவனத்தின் 2020 டி.யு.வி.300 பிளஸ் கார் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.



மஹிந்திரா நிறுவனத்தின் 2020 டி.யு.வி.300 பிளஸ் மாடல் சோதனை செய்யப்படும் புகைப்படம் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. 2020 மஹிந்திரா டி.யு.வி.300 பிளஸ் மாடல் 2020 தார் மற்றும் அடுத்த தலைமுறை ஸ்கார்பியோ உருவாக்கப்படும் பிளாட்ஃபார்மிலேயே உருவாகிறது.

டி.யு.வி.300 பிளஸ் மாடலில் பி.எஸ். 6 புகை விதிகளுக்கு பொருந்தும் என்ஜின் வழங்கப்படுகிறது. இதன் முன்புறம் முற்றிலும் புதிய வடிவமைப்பு, மேம்பட்ட அம்சங்கள் வழங்கப்படுகின்றன. புதிய டி.யு.வி.300 பிளஸ் அடுத்த ஆண்டு புதிய புகை விதிகள் அமலாகும் முன்பாகவே அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.



ஸ்பை புகைப்படங்களின் படி புதிய கார் மேம்பட்ட ஆறு-ஸ்லாட் கிரில், கருப்பு நிற ஹனிகாம்ப் பேட்டன் கொண்டிருக்கிறது. மற்ற மாற்றங்களின் படி முற்றிலும் புதிய ஹெட்லேம்ப் கூர்மையாகவும், புதிய ஃபாக் லேம்ப்களும் காணப்படுகின்றன. இவற்றை சுற்றி முன்புறம் மேம்பட்ட பம்ப்பர் கொண்டிருக்கிறது. சோதனை செய்யப்படும் கார் முற்றிலும் மறைக்கப்பட்டிருக்கிறது.

இதன் பின்புறம் டி.யு.வி.300 பிளஸ் மாடலில் தற்போதைய மாடலில் உள்ளதை போன்ற டெயில்கேட் மற்றும் ஸ்பேர் வீல் வழங்கப்படுகிறது. 2020 டி.யு.வி.300 பிளஸ் மாடலில் தற்போதைய மாடலை விட அதிகளவு மெக்கானிக்கல் மாற்றங்கள் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய மாடலில் 1.5 லிட்டர் எம்ஹாக் 100 டீசல் என்ஜின் மற்றும் டூ-ஸ்டேஜ் டர்போசார்ஜர் வழங்கப்படும் என தெரிகிறது. இது 100 ஹெச்.பி. திறன் வழங்கும் என கூறப்படுகிறது. இந்த என்ஜின் பி.எஸ். 6 புகை விதிகளுக்கு பொருந்தும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் மஹிந்திரா டி.யு.வி.300 மாடல் 2015 ஆம் ஆண்டு முதல் விற்பனை செய்யப்படுகிறது. 

புகைப்படம் நன்றி: Gaadiwaadi
Tags:    

Similar News