செய்திகள்
விவசாயிகள் அமைப்பு அறிவிப்பு

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் நாளை ரெயில் மறியல் போராட்டம் - விவசாயிகள் அமைப்பு அறிவிப்பு

Published On 2021-02-17 14:02 GMT   |   Update On 2021-02-17 14:02 GMT
வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் நாளை ரெயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று விவசாயிகள் அமைப்பு அறிவித்துள்ளது.
புதுடெல்லி:

புதிய வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக டெல்லியில் அரியானா, பஞ்சாப் மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் 80 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். போராட்டம் நடத்தும் விவசாயிகளிடம் மத்திய அரசு நடத்திய பலகட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. புதிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெறும் வரை தங்கள் போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று விவசாயிகள் அறிவித்து உள்ளனர். 

இந்த சூழலில் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் இன்று 84-வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் நாளை ரெயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று விவசாயிகள் அமைப்பு அறிவித்துள்ளது. இதன்படி நாளை காலை12 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த போராட்டம் நடைபெறும் என விவசாயிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

ஏற்கனவே, வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள், கடந்த, 6ம் தேதி மூன்று மணி நேரம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த போராட்ட அறிவிப்பு காரணமாக, பஞ்சாப், அரியானா, உ.பி., மேற்கு வங்கத்தில் ரெயில் நிலையங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News