செய்திகள்
அயோத்தி மக்கள்

‘ராமாயணம்’ டி.வி. தொடர் காலத்தை நினைவூட்டிய அயோத்தி மக்கள்

Published On 2020-08-05 21:58 GMT   |   Update On 2020-08-05 21:58 GMT
அயோத்தியில் நேற்று நடந்த ராமர் கோவில் பூமி பூஜை நிகழ்ச்சி, தொலைக்காட்சி சேனல்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
அயோத்தி:

அயோத்தியில் நேற்று நடந்த ராமர் கோவில் பூமி பூஜை நிகழ்ச்சி, தொலைக்காட்சி சேனல்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. அயோத்தியில் உள்ள சில நகைக்கடைகள், தங்கள் கடைகளில் உள்ள தொலைக்காட்சிகளில் அந்த நிகழ்ச்சியை போட்டனர். மேலும், மக்களையும் பார்க்க அனுமதித்தனர்.

அதனால், ஏராளமான பொதுமக்களும், அவ்வழியாக சென்றவர்களும், பாதுகாப்பு படையினரும் கூட அக்கடைகளில் நேரடி ஒளிபரப்பை ஆர்வமாக பார்த்தனர். கடந்த 1980-களின் இறுதியில் தூர்தர்ஷனில் ‘ராமாயணம்’ தொடர் ஒளிபரப்பானபோது, டி.வி. உள்ள வீடுகளிலும், கடைகளிலும் பொதுமக்கள் ஆர்வமாக திரண்டு பார்த்தனர். அந்த சம்பவத்தை இது நினைவுபடுத்துவதாக சிலர் தெரிவித்தனர்.

டி.வி. பார்த்தபடியே, ‘ஜெய் ஸ்ரீராம்’ மந்திரங்களையும் சொன்னார்கள். சில கடைக்காரர்கள் லட்டு கொடுத்து மகிழ்ந்தனர். ஊடக வீடியோ, புகைப்பட நிபுணர்கள், வீட்டு மொட்டை மாடிகளில் நின்று படம் பிடித்தனர்.
Tags:    

Similar News