செய்திகள்
பில்லூர் அணை

தொடர் மழை- பில்லூர் அணையின் நீர்மட்டம் 97 அடியை எட்டியது

Published On 2021-10-12 09:50 GMT   |   Update On 2021-10-12 09:50 GMT
நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக படிப்படியாக பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
கோவை:

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் இயற்கை எழில் சூழலில் பில்லூர் அணை அமைந்துள்ளது. நீலகிரி மாவட்டம் பில்லூர் அணை, இந்த அணையானது, நீர்பிடிப்பு பகுதிகள் மேற்கு தொடர்ச்சி மலை வனக்காடுகள் மற்றும் கேரளாவில் பெய்யும் மழை நீரை ஆதாரமாக கொண்டு பில்லூர் அணை கட்டப்பட்டது.

பில்லூர் அணையில் மொத்த நீர்மட்ட உயரம் 100 அடியாகும். இந்த நிலையில் தற்போது வடகிழக்கு பருவமழை காரணமாக நீலகிரி மாவட்டம் பில்லூர் நீர்பிடிப்பு பகுதிகள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை வனக்காடுகளில் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு அணையின் நீர்மட்ட உயரம் 83 அடி ஆகவும், கடந்த 9-ம் தேதி அணையின் நீர்மட்டம் உயரம் 86 அடியாகவும் இருந்தது. தற்போது நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக படிப்படியாக பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இன்று அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 200 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையின் நீர்மட்ட உயரம் கிடுகிடுவென உயர்ந்து 97 அடியை எட்டியது.

அணையில் மின்சார உற்பத்திக்காக ஒரு எந்திரத்தை இயக்கியதில் அணையிலிருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேறியது. நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருவதால் பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் உயர்ந்து இன்னும் ஓரிரு நாளில் அணையின் முழு கொள்ளளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News