வழிபாடு
திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் தூய்மைப்பணி

திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் தூய்மைப்பணி

Published On 2022-04-01 04:36 GMT   |   Update On 2022-04-01 04:36 GMT
நாமகொம்பு, ஸ்ரீசூரணம், கஸ்தூரி மஞ்சள், மஞ்சள், பச்சை கற்பூரம், சந்தனம், குங்குமம், கிச்சிலி கட்டா போன்ற சுகந்த திரவியம் அடங்கிய புனித நீர் கோவில் முழுவதும் தெளிக்கப்பட்டது.
திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் நாளை (சனிக்கிழமை) உகாதி பண்டிகை, ஆஸ்தானம் நடக்கிறது. அதையொட்டி நேற்று கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடந்தது.

முன்னதாக கோவிலில் அதிகாலை சுப்ரபாதம், தோமாலா சேவை, கொலு, பஞ்சாங்க சிரவணம் ஆகியவை நடந்தது. அதன்பிறகு காலை 7 மணியில் இருந்து காலை 9 மணி வரை கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடந்தது. அப்போது கோவில் வளாகம், சுவர்கள், மேற்கூரை, பூஜை பொருட்கள் என அனைத்தும் தண்ணீரால் கழுவி சுத்தம் செய்யப்பட்டது.

இதையடுத்து நாமகொம்பு, ஸ்ரீசூரணம், கஸ்தூரி மஞ்சள், மஞ்சள், பச்சை கற்பூரம், சந்தனம், குங்குமம், கிச்சிலி கட்டா போன்ற சுகந்த திரவியம் அடங்கிய புனித நீர் கோவில் முழுவதும் தெளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து காலை 9.30 மணியில் இருந்து கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
Tags:    

Similar News