செய்திகள்
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் மலர் செடிகள் நடும் பணி தொடங்கியது

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் 2 லட்சம் மலர் செடிகள் நடும் பணி தொடங்கியது

Published On 2021-02-19 09:42 GMT   |   Update On 2021-02-19 09:42 GMT
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் 2 லட்சம் மலர் செடிகள் நடும் பணி தொடங்கியது. இதனை தோட்டக்கலை துணை இயக்குனர்கள் சீனிவாசன், சீதாலட்சுமி, பூங்கா மேலாளர் சிவபாலன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
கொடைக்கானல்:

கொடைக்கானலில் உள்ள பிரையண்ட் பூங்காவில் ஆண்டுதோறும் சீசன் காலத்தில் மலர் கண்காட்சி நடைபெறுவது வழக்கம். கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக பூங்காக்கள் மூடப்பட்டன. இதன் காரணமாக கடந்த ஆண்டு மலர் கண்காட்சி ரத்து செய்யப்பட்டது.

இந்த ஆண்டு 59-வது மலர் கண்காட்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அதையொட்டி மலர் கண்காட்சி நடைபெற உள்ள பிரையண்ட் பூங்காவில் ஏற்கனவே 2 கட்டங்களாக மலர்செடிகள் நடவு செய்யப்பட்டது.

இந்நிலையில் 3-ம் கட்டமாக மேரிகோல்டு, பேன்சி, டயான்தஸ், ஆஸ்டர், அன்டிரேனியம் உள்பட பல்வேறு ரகங்களை சேர்ந்த சுமார் 2 லட்சம் மலர் செடிகள் நடவு செய்யும் பணி நேற்று தொடங்கியது. இதனை தோட்டக்கலை துணை இயக்குனர்கள் சீனிவாசன், சீதாலட்சுமி, பூங்கா மேலாளர் சிவபாலன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், இந்த பூக்கள் ஏப்ரல் மாதம் 15-ந்தேதி முதல் பூக்கத் தொடங்கி சுமார் 3 மாத காலம் வரை பூக்கும் தன்மையுடையது. இறுதிக்கட்ட மலர் செடிகள் நடவு செய்யும் பணி ஏப்ரல் மாதம் நடைபெறும் என்றனர்.
Tags:    

Similar News