ஆன்மிகம்
முத்தீஸ்வரசாமி

உசரவிளை முத்தீஸ்வரசாமி கோவில் கும்பாபிஷேக விழா இன்று தொடங்குகிறது

Published On 2021-01-23 05:48 GMT   |   Update On 2021-01-23 05:48 GMT
மேலகிருஷ்ணன்புதூர் அருகே உசரவிளை முத்தாரம்மன் சமேத முத்தீஸ்வர சாமி கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது.
மேலகிருஷ்ணன்புதூர் அருகே உசரவிளை முத்தாரம்மன் சமேத முத்தீஸ்வர சாமி கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. இன்று காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், கலச பூஜை, 9 மணிக்கு தீபாராதனை, அருட்பிரசாதம் வழங்குதல், 10 மணிக்கு தீர்த்த சங்கிரணம், மாலை 4.30 மணிக்கு வாஸ்துஹோமம், 6.30 மணிக்கு முதலாம் கால யாக வேள்வி பூஜைகள், இரவு 9 மணிக்கு வேத உபகார காலம், மகா தீபாராதனை போன்றவை நடக்கிறது.

நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு திருமுறை விண்ணப்பம், 9 மணிக்கு இரண்டாம் கால யாக வேள்வி பூஜைகள், யாகசாலை மண்டப பூஜை, 11 மணிக்கு மகா தீபாராதனை, மாலை 5.30 மணிக்கு 3-ம் கால யாக வேள்வி பூஜைகள், இரவு 7 மணிக்கு மகாலட்சுமி பூஜை, 9 மணிக்கு சிறப்பு தீபாராதனை, பக்தர்களுக்கு அர்ச்சனை குங்கும பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடைபெறும்.

25-ந் தேதி காலை 6.30 மணிக்கு நான்காம் கால யாக வேள்வி பூஜைகள், 9 மணிக்கு மகா தீபாராதனை, கடம் புறப்பாடு, 10 மணிக்கு முத்தாரம்மன் சமேத முத்தீஸ்வரசாமி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு விமான கலச மகா கும்பாபிஷேகம், தொடர்ந்து மூலாலய மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் ஆகியவை நடக்கிறது. கும்பாபிஷேகத்தை சர்வசாதகம் சிவாகமக்ரியாரத்னம் ஜி.ஹரி அய்யர் நடத்தி வைக்கிறார். தொடர்ந்து 11 மணிக்கு அலங்கார தீபாராதனை, மதியம் 12 மணிக்கு மகேஸ்வர பூஜை, 1 மணிக்கு அன்னதானம், மாலை 6 மணிக்கு பரத நாட்டியம், இரவு 8 மணிக்கு தீபாராதனை போன்றவை நடக்கிறது.கும்பாபிஷேக விழாவை தொடர்ந்து 26-ந் தேதி முதல் மார்ச் மாதம் 13-ந் தேதி வரை 48 நாட்கள் சிறப்பு பூைஜகள் நடக்கிறது. இந்த நாட்களில் தீபாராதனை, பஜனை, அபிஷேகம், ஆன்மிக சொற்பொழிவு, அன்னதானம் போன்றவை நடைபெறும். விழா ஏற்பாடுகளை ஊர் தலைவர் செல்வகுமார், செயலாளர் சேதுராம் ஜெகதீசன், பொருளாளர் நாராயணவடிவு மற்றும் ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.
Tags:    

Similar News