லைஃப்ஸ்டைல்

குழந்தைகளின் கருத்திற்கு முக்கியத்துவம் தராமை

Published On 2019-05-29 06:03 GMT   |   Update On 2019-05-29 06:03 GMT
உங்கள் குழந்தையை அவர்களுக்குத் தேவையானவற்றை தேர்ந்து எடுத்துக்கொள்ளவும், தனிப்பட்ட உணர்வுகளை வெளிப்படுத்தவும் அனுமதியுங்கள். இவ்வாறு செய்வது, அவர்களுடைய விருப்பங்கள் மற்றும் தெரியப்படுத்த விரும்புகிறவற்றை பேசுவதற்கு துணை செய்யும்.
‘ஒன்றை நீ முடிவு செய்யகூடாது. ஏனென்றால், உனக்கு வயசு போதாது அல்லது பெரியவர்களுக்கு எல்லாம் தெரியும்’ அன்றாட வாழ்க்கையில் நாம் அடிக்கடி கேட்ககூடிய வார்த்தைகள்தான் இவை. உண்மையைச் சொல்வது என்றால் இவை போன்றவற்றைக் கேட்பது இனிமையான ஒன்றாக இருக்க வாய்ப்பு இல்லை. உதாரணத்துக்கு, உங்கள் குழந்தை தவறு இழைத்தல் என்பது ஒன்றும் மோசமான செயல் அல்ல.

எந்த ஒரு குழந்தையின் கருத்து அடிக்கடி நிராகரிக்கப்படுகிறதோ அக்குழந்தை ஒருவிதமான பாதுகாப்பு அற்ற சூழலிலே வளரக்கூடும். உண்மையிலேயே, இது சரியான உணர்வைத் தோற்றுவிக்கும். உங்களுக்காக வேறொருவர் எல்லா முடிவுகளையும் மேற்கொள்ளும்போது, வாழ்க்கையிடம் இருந்து நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்பதை உங்களால் எவ்வாறு தெரிந்து கொள்ள முடியும்?

உங்கள் குழந்தையை அவர்களுக்குத் தேவையானவற்றை தேர்ந்து எடுத்துக்கொள்ளவும், தனிப்பட்ட உணர்வுகளை வெளிப்படுத்தவும் அனுமதியுங்கள். இவ்வாறு செய்வது, அவர்களுடைய விருப்பங்கள் மற்றும் தெரியப்படுத்த விரும்புகிறவற்றை பேசுவதற்கு துணை செய்யும்.

மகிழ்ச்சியாக வைக்க மறுத்தல்குழந்தைப் பருவத்தின் இனிமையான நினைவுகள் மிகவும் மதிக்க தகுந்தவையாகும். அவற்றை யாராலும் நம்மிடம் இருந்து ஒருபோதும் எளிதாகப் பிரித்துவிட முடியாது.

இன்னும் ஒருபடி மேலாக, சின்னசின்ன விடுமுறை காலங்கள் பின்னாளில், பெரிய நிறைவேறுதல்களாக உருமாற்றம் பெறுகின்றன. ஒரு குழந்தை ஆரோக்கியமான சூழலில் வளரும்பட்சத்தில், எண்ணற்ற புதிய அனுபவங்களைப் பெறுகின்றது. இது அவர்கள் விரைவாக வளர்வதைக் காட்டுகின்றது. மகிழ்ச்சி நிறைந்த குழந்தை எளிதாக வாலிபப் பருவத்தினை ஏற்றுக்கொள்வதோடு, புதிய வாழ்க்கையையும் தொடங்குகின்றது.



உண்மை என்னவென்றால் பெற்றோராக மற்றவர்கள் கூறுவதைவிட எது குழந்தைக்கு நல்லது? எது கெட்டது? என்பது உங்களுக்குத்தான் நன்றாகத் தெரியும். மற்றவர்கள் கூறுகிற அறிவுரையை நீங்கள் கேட்கலாமே தவிர அவற்றைப் பின்பற்ற வேண்டும் என்ற அர்த்தம் இல்லை.

தனிமைப்படுத்துதல் நமக்கு முக்கியத்துவம் இல்லாமல் தெரிகிற விஷயங்கள், குழந்தைகளுக்கு அதி முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகத் தெரியலாம். அனைத்து மக்களுக்கும், குறிப்பாக, மழலைகளுக்குச் சிலராவது, அவர்களிடம் விழாக்காலங்களில் அன்பாக அரவணைப்பாக இருக்க வேண்டும் என்பது தேவையாக உள்ளது.

உங்கள் குழந்தையின் பிறந்த நாள் விழாவில், பங்கேற்காமல் இருக்க சரியான காரணம் இருந்தாலும், அவ்வாறு நடக்க முயற்சி செய்யாதீர்கள். ஏனென்றால், எதிர்காலத்தில் எவ்வளவு முக்கியமான தருணத்தை இழந்து விட்டீர்கள் என்பதை உணர்ந்து, அதற்காக மன்னிப்பு கேட்க வேண்டிய நிலை உண்டாகும்.

குழந்தைகளுடன் சேர்ந்து விழாக்காலத்தில் வீட்டினை அலங்கரிக்கவும், சினிமாவிற்குப் போகவும், பாட்டியுடன் ஒன்றாக இருக்கவும் நேஇரத்தை ஒதுக்கி கொள்ளுங்கள். ஏனென்றால் வாழ்வில் இவையெல்லாம் முக்கிய மணித்துளிகள். மழலைகள் வளரும்பட்சத்தில், இவற்றை நீங்கள் இழக்க நேரிடும்.

Tags:    

Similar News