வழிபாடு
திருப்பதி கோதண்டராம சுவாமி கோவில்

திருப்பதி கோதண்டராம சுவாமி கோவிலில் ஏப்ரல் மாதம் நடக்கும் சிறப்பு உற்சவங்கள்

Published On 2022-04-01 07:16 GMT   |   Update On 2022-04-01 07:16 GMT
திருப்பதியில் உள்ள கோதண்டராமசுவாமி கோவிலில் ஏப்ரல் மாதம் நடக்கும் சிறப்பு வாய்ந்த உற்சவங்கள் குறித்த விவரங்களை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருப்பதியில் உள்ள கோதண்டராமசுவாமி கோவிலில் ஏப்ரல் மாதம் நடக்கும் சிறப்பு உற்சவங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது அதன்படி ஏப்ரல் மாதம் 2, 9, 16, 23, 30 ஆகிய தேதிகளில் வரும் சனிக்கிழமைகளில் காலை 6 மணிக்கு மூலவர்களுக்கு அபிஷேகம் நடைபெறும். மாலை 3 மணி முதல் 5 மணி வரை உகாதி ஆஸ்தானம் நடைபெறும்.

ஏப்ரல் 10-ந் தேதி மாலை 4 மணிக்கு ஸ்ரீராமநவமி ஆஸ்தானம், 11-ந் தேதி இரவு 7 மணிக்கு சீதா-ராமர் திருக்கல்யாணம், தங்கத் திருச்சியில் சுவாமி தரிசனம் நடக்கிறது. 12-ந் தேதி இரவு 7 மணிக்கு ராமர் பட்டாபிஷேகம் நடைபெறும். அப்போது தங்க திருச்சியில் காட்சியளிக்கிறார். 13-ந் தேதி மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை தோட்டா உற்சவம் ஆஸ்தானம் நடைபெறும்.

14-ந்தேதி முதல் 16-ந் தேதி வரை ராமச்சந்திர புஷ்கரணியில் சீதா லட்சுமணருடன், கோதண்டராமசுவாமி தெப்பத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 16-ந் தேதி பவுர்ணமி அன்று காலை 9 மணிக்கு கோவிலில் அஷ்டோத்திர சதா கலசாபிஷேகம் நடைபெறும். 30-ந் தேதி அமாவாசை தினத்தன்று காலை 6 மணிக்கு சகஸ்ர கலசாபிஷேகம் நடைபெறும். இரவு 7 மணிக்கு அனுமந்த வாகன சேவை நடைபெறும்.
Tags:    

Similar News