செய்திகள்

அரக்கோணத்தில் மேம்பாட்டு பணி: மின்சார ரெயில் சேவையில் இன்று முதல் 6 நாட்கள் மாற்றம்

Published On 2018-04-30 23:00 GMT   |   Update On 2018-04-30 23:00 GMT
அரக்கோணத்தில் மேம்பாட்டு பணி காரணமாக இன்று முதல் 6 நாட்கள் மின்சார ரெயில் சேவையில் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன.
சென்னை:

வேலூர் மாவட்டம் அரக்கோணம் யார்டு பகுதியில் ரெயில்வே மேம்பாட்டு பணி நடைபெற உள்ளதால் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

சென்னை கடற்கரை-திருத்தணி மாலை 6.25 மணி, மூர்மார்க்கெட்-அரக்கோணம் இரவு 7.30, 8.10 மணி, மூர்மார்க்கெட்-திருவள்ளூர் இரவு 9.40 மணி, திருத்தணி-அரக்கோணம் இரவு 9.05 மணி, சென்டிரல்-அரக்கோணம் பிற்பகல் 1.10 மணி, செங்கல்பட்டு-அரக்கோணம் இரவு 8.25 மணி மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.

திருத்தணி-மூர்மார்க்கெட் மாலை 4.55 மணி, பட்டாபிராம்-மூர்மார்க்கெட் மாலை 6.50 மணி, திருவள்ளூர்-மூர்மார்க்கெட் மாலை 6.55 மணி ரெயில்கள் வேளச்சேரி மார்க்கமாக செல்லும். கடற்கரை-வேலூர் மாலை 6 மணி ரெயில் அரக்கோணம் வரை மட்டுமே செல்லும்.

அரக்கோணம்-திருத்தணி இடையே மின்சார ரெயில் சேவை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. மூர்மார்க்கெட்-திருவள்ளூர் காலை 9.15, 12.10, 2 மணி, ஆவடி-மூர்மார்க்கெட் காலை 5.25 மணி, திருவள்ளூர்-மூர்மார்க்கெட் பிற்பகல் 3.40 மணி ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. அரக்கோணம்-கடற்கரை காலை 6.25 மணி, மூர்மார்க்கெட்-அரக்கோணம் இரவு 10.45 மணி ரெயில்கள் ஆவடியில் இருந்து இயக்கப்படும்.

மூர்மார்க்கெட்-திருத்தணி 7.05, 9.10, 11.45, 12.50, 2.20, 3.30, 5.40, 6.40 மணி, திருத்தணி-மூர்மார்க்கெட் காலை 10, 12.30, 3, 4, 5.30, 6.35, 8.40, 9.40 மணி, கடற்கரை-திருவாலங்காடு நள்ளிரவு 1.20, அதிகாலை 4.25 மணி, ஆவடி-திருவாலங்காடு காலை 6.25 மணி, மூர்மார்க்கெட்-திருவாலங்காடு காலை 6.30, 9.45, 2.10, 6.05, 6.45, 7.30, 8.55 மணி, வேளச்சேரி-திருவாலங்காடு காலை 7.15, 4.55 மணி, திருத்தணி-திருவள்ளூர் இரவு 11 மணி சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

திருவலங்காடு-வேளச்சேரி காலை 4.15, 7.45 மணி, திருவாலங்காடு-மூர்மார்க்கெட் காலை 6.55, 8.30, 11.40, 4.25, 7.50, 8.20, 8.55, 9.45 மணி, திருவாலங்காடு-திருவள்ளூர் காலை 10.20, இரவு 10.55 மணி, மூர்மார்க்கெட்-ஆவடி பிற்பகல் 1.30 மணி, ஆவடி-வேளச்சேரி பிற்பகல் 2.20 மணி சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

இந்த தகவலை தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ளது. 
Tags:    

Similar News