செய்திகள்
கவர்னர் ஆர்.என். ரவி, மு.க.ஸ்டாலின் சந்திப்பு (கோப்பு படம்)

நீட் தேர்வு விலக்கு மசோதா- கவர்னருடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

Published On 2021-10-13 11:47 GMT   |   Update On 2021-10-13 12:55 GMT
சட்டசபையில் நிறைவேற்றிய நீட் தேர்வு விலக்கு மசோதா குறித்து கவர்னர் ஆர்.என்.ரவியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கி கூறினார்.
சென்னை:

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு பெறும் புதிய சட்ட மசோதாவை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த செப்டம்பர் 13-ந்தேதி சட்டசபையில் தாக்கல் செய்தார். ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவினர் தந்த அறிக்கையின் அடிப்படையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. சட்ட மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து தமிழக கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 5 மணிக்கு கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசினார். அப்போது சட்டசபையில் நிறைவேற்றிய 
நீட் தேர்வு
 விலக்கு மசோதா குறித்து விளக்கி கூறினார். மேலும், அந்த மசோதாவுக்கு ஜனாதிபதியின் ஒப்புதல் பெற்று தரவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

நீட் தேர்வு விலக்கிற்கு ஆதரவு கோரி ஏற்கனவே 12 மாநில முதல்-மந்திரிகளுக்கு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News